ETV Bharat / sports

WPL 2026: லிட்ச்ஃபீல்ட் அதிரடி வீண்; வாரியர்ஸை வீழ்த்தி ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி

யுபி வாரியர்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட குஜராத் ஜெயண்ட்ஸ் வீராங்கனை ஜார்ஜியா வெர்ஹாம் ஆட்ட நாயகி விருதை வென்றார்

வாரியர்ஸை வீழ்த்தி ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி
வாரியர்ஸை வீழ்த்தி ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 10, 2026 at 6:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

நவி மும்பை: யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.

மகளிர் பிரீமியர் லீ டி20 தொடரின் நான்காவது சீசன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் யுபி வாரியர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் 65 ரன்களையும், அறிமுக வீராங்கனை அனுஷ்கா சர்மா 44 ரன்களையும், சோஃபி டிவைன் 38 ரன்களையும் சேர்த்தனர். யுபி வாரியர்ஸ் அணி தரப்பில் சோஃபி எக்லெஸ்டோன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய யுபி வாரியர்ஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கிரண் நவ்கிரே ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் மெக் லேனிங் - போப் லிட்ச்ஃபீல்ட் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இரண்டாவது விக்கெட்டிற்கு 70 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.

அதன்பின் 30 ரன்களைச் சேர்த்த கையோடு மெக் லெனிங் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஹர்லீன் தியோல் ரன்கள் ஏதுமின்றியும், தீப்தி சர்மா ஒரு ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த போப் லிட்ச்ஃபீல்ட் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஸ்வேதா ஷ்ரேவாத் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மேற்கொண்டு 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 78 ரன்களைச் சேர்த்த கையோடு போப் லிட்ச்ஃபீல்டும் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளாலும் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் யுபி வாரியர்ஸ் அணியால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

இதையும் படிங்க

குஜராத் அணி தரப்பில் ரேனுகா சிங், சோஃபி டிவைன் மற்றும் ஜார்ஜியா வெர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதன் மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்ட ஜார்ஜியா வெர்ஹாம் ஆட்ட நாயகி விருதை வென்றார்.