ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: பால் ஸ்டிர்லிங் தலைமையில் அயர்லாந்து அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணியில் டிம் டெக்டர், பென் கலிட்ஸ் மற்றும் மேத்யூ ஹம்ப்ரீஸ் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

Published : January 10, 2026 at 2:26 PM IST
ஹைதரபாத்: டி20 உலகக் கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக அனுபவ வீரர் பால் ஸ்டிர்லிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிகளில் இறங்கியுள்ளன. மேலும் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் தங்களின் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணிகளை அறிவித்துள்ளன. அதே சமயம் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகளும் கூடிய விரையில் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் தங்கள் நாட்டு அணிகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
█▓▒▒░░░SQUAD REVEALED░░░▒▒▓█
— Cricket Ireland (@cricketireland) January 9, 2026
The Irish squad heading to the @ICC Men's @T20WorldCup has been named.
👉 Find all the details here: https://t.co/DpGprjhJkD#LoveCricket #BackingGreen #IrishCricket ☘️🏏 pic.twitter.com/HQ5X2motcQ
இந்த நிலையில், எதிர் வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இருக்கும் அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. 15 பேர் அடங்கிய இந்த அணியில் கேப்டனாக அனுபவ வீரர் பால் ஸ்டிர்லிங் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமான பால் ஸ்டிர்லிங், அயர்லாந்து அணிக்காக இதுவரை 156 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.
We can't wait for the @ICC Men's @T20WorldCup 🙌#LoveCricket #BackingGreen pic.twitter.com/sXpxZEGtbG
— Cricket Ireland (@cricketireland) January 9, 2026
இதில் அவர் ஒரு சதம் மற்றும் 24 சதங்களை விளாசியதுடன் 3,798 ரன்களையும் குவித்து அசத்தியுள்ளார். மேலும் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணியில் துணைக் கேப்டனாக லோர்கன் டக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுதவிர்த்து இந்த அயர்லாந்து அணியில் டிம் டெக்டர், பென் கலிட்ஸ் மற்றும் மேத்யூ ஹம்ப்ரீஸ் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ள நிலையில், கடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடிய 12 வீரர்கள் தங்கள் இடங்களை தக்க வைத்துள்ளனர்.
எதிர் வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா, இலங்கை, ஜிம்பாப்வே, ஓமன் அணிகளுடன் சேர்ந்து குரூப் பி பிரிவில் அயர்லாந்து அணி இடம் பிடித்துள்ளது. மேலும், பிப்ரவரி 8 ஆம் தேதி இலங்கை அணியை எதிர்த்து தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் விளையாடும் அயர்லாந்து அணி, அடுத்தடுத்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, ஓமன் மற்றும் ஜிம்பாப்வே அணிகளை எதிர்கொள்ள இருக்கிறது.
Ireland bank on familiar faces and experience for their push at the #T20WorldCup 💪
— ICC (@ICC) January 9, 2026
More on their squad ➡️ https://t.co/SEzP3XepHd pic.twitter.com/V9y7jaKfPK
டி20 உலகக் கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணி: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அதிர், ராஸ் அதிர், பென் காலிட்ஸ், கர்டிஸ் கேம்பர், கேரத் டெலானி, ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப்ரீஸ், ஜோஷுவா லிட்டில், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், டிம் டெக்டர், லோர்கன் டக்கர், பென் வைட், கிரேக் யங்.
இதையும் படிங்க |
டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணிகள் & குரூப்
- குரூப் ஏ பிரிவு - இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியா.
- குரூப் பி பிரிவு - ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஓமன்.
- குரூப் சி பிரிவு - இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபாளம், இத்தாலி.
- குரூப் டி பிரிவு - நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம்

