மண்டல அளவிலான ஐடிஐ விளையாட்டுப் போட்டிகள் - அரியலூரில் தொடங்கியது
மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Published : February 24, 2026 at 3:12 PM IST
அரியலூர்: விழுப்புரம் மண்டல அளவிலான அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடம் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் விழுப்புரம் மண்டல அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கின. இதனை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா. சாஸ்திரி, மாவட்ட பேட்மிண்டன் கழக தலைவர் சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இதில் அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைந்த தனியார் தொழிற் பயிற்சி நிலைய மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் தடகளம், கபடி, கைப்பந்து, கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு குழு மற்றும் தனிநபர் போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் இடையே தனித்தனியாக நடத்தப்படுகின்றன.
இதையும் படிங்க |
மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் மறைந்திருக்கும் விளையாட்டுத் திறமைகளை வெளிக் கொண்டு வரவும் இந்த போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்கள், மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெறுவார்கள். வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

