ETV Bharat / sports

காயத்தால் தவிக்கும் நியூசிலாந்து: இந்தியத் தொடரிலிருந்து விலகினார் வில்லியம் ஓ ரூர்க்!

கடந்த 24 மணி நேரத்தில் மார்க் சாப்மேன் மற்றும் ஜக்காரி ஃபால்க்ஸ் ஆகியோரைத் தொடர்ந்து, மூன்றாவது நியூசிலாந்து வீரராக வில்லியம் ஓ'ரூக் தொடரிலிருந்து விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

வில்லியம் ஓ ரூர்க்
வில்லியம் ஓ ரூர்க் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : October 10, 2026 at 3:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் கிரிக்கெட் தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க் காயம் காரணமாக விலகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடர், வரும் அக்டோபர் 22ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் முதலாவது டி20 போட்டியுடன் தொடங்கவுள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகி வருவது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. நேற்று நியூசிலாந்து அணியின் மார்க் சாப்மேன் மற்றும் ஜக்காரி ஃபால்க்ஸ் ஆகியோர் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து விலகினர்.

இதனையடுத்து, அவர்களுக்குப் பதிலாக ஆல்-ரவுண்டர் ஜோஷ் கிளார்க்ஸன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பிளெய்ர் டிக்னர் ஆகியோர் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்சமயம் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க்கும் காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து முழுமையாக விலகியுள்ளார் என்பதை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

தற்போது 25 வயதாகும் வில்லியம் ஓ ரூர்க், தொடைப் பகுதி மற்றும் கணுக்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள காயங்கள் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள முக்கியமான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டு, அவர் முழு உடற்தகுதியை எட்ட வேண்டும் என்பதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த முன்னெச்சரிக்கை முடிவை எடுத்துள்ளது.

முன்னதாக, முதுகில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக 7 மாதங்கள் ஓய்வில் இருந்த அவர், சமீபத்தில்தான் சர்வதேச கிரிக்கெட்டிற்குத் திரும்பினார். எனினும், இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாளிலும், ஆகஸ்ட் மாத இறுதியிலும் அவருக்கு அடுத்தடுத்து காயங்கள் ஏற்பட்டன. தற்போது வரையிலும் அவர் காயங்களிலிருந்து முழுமையாகக் குணமடையாததன் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர் கூறுகையில், "சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான தொடரை வில்லியம் ஓ ரூர்க் தவறவிடுவது ஏமாற்றமளிக்கிறது. அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட இருந்தார். ஆனால், தற்போது அவர் காயங்களிலிருந்து முழுமையாக மீண்டு வரவும், பந்துவீச்சு சுமையைப் படிப்படியாக அதிகரிக்கவும் கூடுதல் அவகாசம் வழங்குவதே சிறந்தது.

இதையும் படிங்க

மேலும், ஆஸ்திரேலிய தொடரை மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதியில் கேன்டர்பரி அணிக்காக 'பிளங்கெட் ஷீல்ட்' உள்நாட்டுப் போட்டியில் அவர் விளையாடுவார். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், டிசம்பர் 9ஆம் தேதி பெர்த் நகரில் தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு அவர் தயாராகிவிடுவார்" என்று தெரிவித்துள்ளார்.