இந்திய தொடருக்கான நியூசிலாந்து ஒருநாள் அணி அறிவிப்பு; ஆலன், ஃபெர்குசன், செய்ஃபெர்ட் கம்பேக்!
ஒருநாள் தொடரைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகள் நடக்கவிருப்பதால், வீரர்களின் பணிச்சுமையைக் குறைக்க முதல் 3 போட்டிகளுக்கு ஒரு அணியும், கடைசி 2 போட்டிகளுக்கு மற்றொரு அணியையும் நியூசிலாந்து அறிவித்துள்ளது.


Published : October 11, 2026 at 1:19 PM IST
ஹைதராபாத்: இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபின் ஆலன், லாக்கி பெர்குசன் மற்றும் டிம் சீஃபர்ட் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்தத் தொடர், வரும் அக்டோபர் 22ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் முதலாவது டி20 போட்டியுடன் தொடங்கவுள்ளது. இதையடுத்து டி20 தொடருக்கான இரு அணிகளும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், இந்திய அணிக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த ஒருநாள் தொடரைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடக்கவிருப்பதால், வீரர்களின் பணிச்சுமையைக் குறைக்க முதல் 3 போட்டிகளுக்கு ஒரு அணியும், கடைசி 2 போட்டிகளுக்கு மற்றொரு அணியையும் நியூசிலாந்து அறிவித்துள்ளது.
The limited-edition Kotahitanga ODI shirt by Castore 🌿 🪷 Buy yours now at https://t.co/QmhJAXWozn or selected Rebel Sport stores. https://t.co/Low9ib2lf8
— BLACKCAPS (@BLACKCAPS) October 10, 2026
மிட்செல் சான்ட்னர் தலைமையிலான இந்த அணியில் ஃபின் ஆலன், லோக்கி ஃபெர்குசன் மற்றும் டிம் செய்ஃபெர்ட் ஆகியோர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆலன் மற்றும் பெர்குசன் கடைசியாக 2023ஆம் ஆண்டும், செய்ஃபெர்ட் 18 மாதங்களுக்கு முன்பும் நியூசிலாந்து அணிக்காக ஒருநாள் போட்டியில் விளையாடினர். மேலும், தோள்பட்டை காயத்தில் இருந்து குணமடைந்துள்ள ரச்சின் ரவீந்திரா முதல் மூன்று போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதேசமயம் காயம் காரணமாக சாக் ஃபவல்க்ஸ், வில்லியம் ஓ'ரூர்க் மற்றும் பென் சியர்ஸ் ஆகியோருக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், டாம் லாதம் போன்ற நட்சத்திர வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
New Zealand have announced their squads for the ODI series against India 🇳🇿 First slide - squad for ODIs 1 to 3 Second slide - squad for ODIs 4 & 5 @BLACKCAPS #MitchellSantner #NZvIND #CricketFans https://t.co/Ukv6M1NkRL
— the_cricket_web (@the_cricket_web) October 11, 2026
| இதையும் படிங்க |
முதல் 3 ஒருநாள் போட்டிகளுக்கான அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, ஜேக்கப் டஃபி, மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், டாம் லாதம், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, நாதன் ஸ்மித், பிளேயர் டிக்னர், வில் யங்.
4 மற்றும் 5 வது ஒருநாள் போட்டிகளுக்கான அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், கிறிஸ்டியன் கிளார்க், ஜேக்கப் டஃபி, மேத்யூ ஃபிஷர், லோக்கி ஃபெர்குசன், மிட்செல் ஹே, நிக் கெல்லி, டிம் செய்ஃபெர்ட், பிளேயர் டிக்னர், வில் யங்.

