ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்து, நேபாள் அணிகள் அறிவிப்பு
டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னரும், நேபாள் அணியின் கேப்டனாக ரோஹித் பௌடலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Published : January 7, 2026 at 10:20 AM IST
ஹைதராபாத்: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து மற்றும் நேபாள் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் இன்று அறிவித்துள்ளன.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் தற்சமயம் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. மிட்செல் சான்ட்னர் தலைமையிலான இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் ஃபின் ஆலன், டிம் செஃபெர்ட், ஜேக்கப் டஃபி, லோக்கி ஃபெர்குசன் உள்ளிட்டோர் மீண்டு நியூசிலாந்து அணிக்கு திரும்பியுள்ளனர். முன்னதாக இவர்கள் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை.
Jacob Duffy is set for his first senior World Cup after being included in an experienced 15-player squad for the upcoming ICC Men's T20 World Cup in India and Sri Lanka, starting next month 🏆 #T20WorldCup https://t.co/qK3qvU3hz6
— BLACKCAPS (@BLACKCAPS) January 6, 2026
அதேசமயம் இந்திய தொடரில் வாய்ப்பு பெற்றிருந்த மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, டேரில் மிட்செல், கிளென் பிலீப்ஸ், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் இடம் கிடைத்துள்ளது. மேலும் இந்த அணியில் கூடுதல் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் கைல் ஜேமிசனுக்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளது. அட்னால் டிம் ராபின்சன், பெவான் ஜேக்கப்ஸ், ஜக்காரி ஃபால்கஸ் உள்ளிட்டோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, லோக்கி ஃபெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செஃபெர்ட், இஷ் சோதி. கைல் ஜேமிசன்*.
Ready for India and Sri Lanka 🫡
— BLACKCAPS (@BLACKCAPS) January 6, 2026
Your BLACKCAPS squad for next month's ICC Men's T20 World Cup 🏆 #T20WorldCup pic.twitter.com/RQGQfDHh7X
இதுதவிர இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் நேபாள் அணியையும் அந்நாட்டு கிரிக்கெ வாரியம் இன்று அறிவித்தது. இதில் அணியின் கேப்டனாக ரோஹித் பௌடல் தொடரும் நிலையில், அணியின் துணைக்கேப்டன் பொறுப்பு திபேந்திர சிங் ஐரிக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணியில் நட்சத்திர வீரர்கள் சந்தீப் லமிச்சனே, சந்தீப் ஜோரா, ஆசிஃப் ஷேக், குல்சன் ஜா உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான நேபாள் அணி: ரோஹித் பவுடல் (கேப்டன்), திபேந்திர சிங் ஐரி, சந்தீப் லமிச்சனே, குஷால் புர்டெல், ஆசிப் ஷேக், சுந்தீப் ஜோரா, ஆரிப் ஷேக், பசீர் அகமது, சோம்பால் கமி, கரண் கே.சி, நந்தன் யாதவ், குல்ஷன் ஜா, லலித் ராஜ்பன்ஷி, ஷேர் மல்லா, லோகேஷ் பாம்
Nepal unveil a well-rounded side as they aim to make a strong impression at #T20WorldCup 2026 💪
— ICC (@ICC) January 7, 2026
Read more 👉 https://t.co/xQAWzaf5cd pic.twitter.com/l8H3laSJNP
இதையும் படிங்க |
டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணிகள் & குரூப்
- குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியா.
- குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஓமன்.
- குரூப் சி பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், நேபாளம், இத்தாலி.
- குரூப் டி பிரிவில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், கனடா, ஐக்கிய அரபு அமீரகம்

