ஆடவர் ஹாக்கி இந்தியா லீக் 2026: தமிழ்நாடு vs ஹைதராபாத் இன்று மோதல்
ஆடவர் ஹாக்கி இந்தியா லீக் தொடர் ஜனவரி 3 முதல் 19ஆம் தேதி வரையிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது.


Published : January 3, 2026 at 3:00 PM IST
சென்னை: ஆடவர் ஹாக்கி இந்தியா லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் மற்றும் ஹைதரபாத் டூபன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஆடவருக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடரானது இன்று (ஜனவரி 3) முதல், எதிர்வரும் வரும் 26ஆம் தேதி வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான முதல் கட்ட போட்டிகள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளன.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட போட்டிகள் ஜனவரி 11 முதல் 19ஆம் தேதி வரை ராஞ்சியிலும், மூன்றாம் கட்ட போட்டிகள் ஜனவரி 17 முதல் 26 ஆம் தேதி வரை புவனேஸ்வரிலும் நடைபெறவுள்ளன. இந்த தொடரில் தமிழ்நாடு, ஹைதராபாத், பஞ்சாப், டெல்லி, உத்திரபிரதேசம், கொல்கத்தா, புவனேஷ்வர் மற்றும் ராஞ்சி என 8 அணிகள் பங்கேற்கின்றனர்.
இதில் இன்று நடைபெறவுள்ள முதல் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணியானது, ஹைதரபாத் டூபன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த ஹாக்கி இந்தியா லீக் தொடரானது கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இதில் ராஞ்சி அணி அதிகபட்சமாக இரண்டு முறை பட்டத்தை வென்றுள்ள நிலையில், டெல்லி, பஞ்சாப், புவனேஷ்வர் அணிகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றுள்ளனர்.
This is how seasons begin, with intent and edge! 💪🔥
— Hockey India League (@HockeyIndiaLeag) January 3, 2026
Accord Tamil Nadu Dragons face Hyderabad Toofans in Match 1️⃣ of the Men’s HERO Hockey India League. 🏑
📍Mayor Radhakrishnan Hockey Stadium
🗓️ 3 January 2025 | ⏰ 7 PM IST
YouTube: https://t.co/w8du1Mv4aq
Watch the HERO… pic.twitter.com/ECZ4T1b3w1
இதையும் படிங்க |
கடந்த ஹாக்கி இந்தியா சீசனில் பெங்கால் டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தது. இதனால் இந்த சீசனில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்த போட்டிகளை ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1, 3, மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரலையில் காணலாம்.

