ETV Bharat / sports

மெஸ்ஸி, எம்பாப்பே சாதனைகளைத் தகர்த்த லாமின் யமால்; 5 கோல்கள் அடித்து பார்சிலோனா அபார வெற்றி!

இப்போட்டியில் லாமின் யமால் இரண்டு கோல்களைப் பதிவு செய்ததன் மூலம், ஐரோப்பாவின் டாப் 5 கால்பந்து லீக் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் 50 கோல்களை அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

மெஸ்ஸி, எம்பாப்பே சாதனைகளைத் தகர்த்த லாமின் யமால்
மெஸ்ஸி, எம்பாப்பே சாதனைகளைத் தகர்த்த லாமின் யமால் (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : September 1, 2026 at 3:13 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: லா லிகா கால்பந்து தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில், பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ராயோ வாலேகானோ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் கால்பந்து திருவிழா என்று அழைக்கப்படும் 'லா லிகா' (LALIGA) கால்பந்து தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற லீக் போட்டியில், நடப்புச் சாம்பியனான பார்சிலோனா அணி, ராயோ வாலேகானோ அணியை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல்களைப் பதிவு செய்தனர்.

அதன்படி ஆட்டத்தின் 12ஆவது நிமிடத்தில் வாலேகானோ அணியின் நட்சத்திர வீரர் செர்ஜியோ கெமெல்லோ முதல் கோலைப் பதிவு செய்து அசத்தினார். மறுபக்கம் பதிலடி கொடுக்கும் முனைப்பில் விளையாடிய பார்சிலோனா அணிக்கு, ஆட்டத்தின் 19ஆவது நிமிடத்தில் ரஃபின்ஹாவும், ஆட்டத்தின் 21ஆவது நிமிடத்தில் லாமின் யமாலும் அடுத்தடுத்து கோல்களைப் பதிவு செய்து அணியை முன்னிலைப்படுத்தினர்.

இதன் காரணமாக முதல் பாதி ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் பார்சிலோனா அணியின் கையே ஓங்கியிருந்தது. ஏனெனில் ஆட்டத்தின் 51ஆவது நிமிடத்தில் எதிரணி வீரர் புளோரியன் லெஜியூன் ஓன் கோல் ஒன்றை பதிவுசெய்ய, பார்சிலோனா அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

அதன்பின் வாலேகானோ அணியின் செர்ஜியோ கெமெல்லோ ஆட்டத்தின் 59ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோலை பதிவு செய்து அணிக்கு நம்பிக்கையளித்தார். ஆனால், மறுபக்கம் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணிக்கு, ஆட்டத்தின் 71ஆவது நிமிடத்தில் ரஃபின்ஹா மீண்டும் ஒரு கோலை பதிவு செய்ய, 90ஆவது நிமிடத்தில் லாமின் யமாலும் தனது இரண்டாவது கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

மறுபக்கம் இறுதிவரை போராடிய வாலேகானோ அணியால் மேற்கொண்டு எந்தவொரு கோலையும் பதிவு செய்ய முடியவில்லை. இதன் மூலம் ஆட்டநேர முடிவில் பார்சிலோனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் வாலேகானோ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளதுடன், 9 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலிலும் ஆதிக்கத்தைத் தொடர்கிறது.

அதேசமயம், இப்போட்டியில் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லாமின் யமால் இரண்டு கோல்களைப் பதிவு செய்ததன் மூலம் புதிய வரலாற்றுச் சாதனையையும் படைத்துள்ளார். அதன்படி, இப்போட்டியின் 21ஆவது நிமிடத்தில் அவர் அடித்த கோலானது, பார்சிலோனா அணிக்காக அவர் அடிக்கும் 50ஆவது கோலாகவும் அமைந்தது. இதன் மூலம் பார்சிலோனா அணிக்காக இளம் வயதில் 50 கோல்களைப் பதிவு செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதையும் படிங்க:

இதுதவிர, ஐரோப்பாவின் டாப் 5 கால்பந்து லீக் வரலாற்றிலேயே இந்தச் சாதனையை மிக இளம் வயதில் செய்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதன் மூலம் அவர் கால்பந்து உலகின் தற்போதைய சூப்பர் ஸ்டார்களான கைலியன் எம்பாப்பே மற்றும் எர்லிங் ஹாலாண்ட் ஆகியோரின் முந்தைய சாதனைகளை முறியடித்தது மட்டுமின்றி, பார்சிலோனாவின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் சாதனையும் (மெஸ்ஸி தனது 21ஆவது வயதில்தான் 50 கோல்களை எட்டினார்) தகர்த்தெறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.