மலேசிய ஓபன் 2026: தொடரிலிருந்து வெளியேறிய லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி
மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனை டோமோஹா மியாசாகியை எதிர்கொள்கிறார்.

Published : January 8, 2026 at 10:51 AM IST
கோலாலம்பூர்: மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடருக்கான ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் லக்ஷ்யா சென் மற்றும் ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.
மலேசியா ஓபன் பேட்மிண்டன் தொடரானது கோலாலம்பூரில் கடந்த ஜனவரி 06ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்க்கு முந்திய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் லக்ஷயா, ஹாங்காங் வீரர் லீ சோக் யியு-வை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு வீரர்களும் சிறப்பாக செயல்பட போட்டியின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது.
லக்ஷயா சென் தோல்வி
பின்னர் முதல் செட்டில் அபாரமாக விளையாடிய லீ சேக் 22-20 என்ற கணக்கில் போராடி வென்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட்டிற்கான போட்டியில் லக்ஷய சென் கம்பேக் கொடுக்க முயற்சித்தார். ஆனால் இறுதிவரை போராடிய நிலையிலும், அவரால் லீ சோக்கிற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் இரண்டாவது செட்டையும் 15-21 என்ற கணக்கில் லக்ஷயா சென் இழந்தார்.
Just in: Lakshya Sen goes down to WR 18 Lee Cheuk You 20-22, 15-21 in 2nd round of Malaysia Open (Super 1000).
— India_AllSports (@India_AllSports) January 8, 2026
That's the END of Indian challenge in Men's Singles. #MalaysiaOpen2026 pic.twitter.com/mSE5duNsva
இதன் மூலம் ஆட்டநேர முடிவில் ஹாங்காங் வீரர் லீ சோக் யியு 22-20, 21-15 என்ற நேர் செட் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்தி, நடப்பு மலோசிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அதேசமயம் இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இந்த வீரர் லக்ஷயா சென் தொடரிலிருந்து வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
ஆயுஷ் ஷெட்டி தோல்வி
இன்று நடைபெற்ற மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் ஷீ யுகியை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தினார். இந்த போட்டியின் தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷீ யுகி முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி ஆயுஷ் ஷெட்டிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
The finest touch.
— BWF (@bwfmedia) January 8, 2026
Follow live action: https://t.co/TjoFnU4PnB@HSBC_Sport
#BWFWorldTour #MalaysiaOpen2026 pic.twitter.com/9TqsdtjdSC
பின்னர் கம்பேக் கொடுத்த ஆயுஷ் ஷெட்டி இரண்டாவது செட்டில் சிறப்பாக் செயல்பட்டதுடன், 21-18 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி பதிலடியைக் கொடுத்தார். இதனால் போட்டியின் முடிவானது மூன்றாவது செட்டை நோக்கி செல்ல, இதில் யார் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.
அதன்பின் மூன்றாம் செட்டில் ஆயுஷ் ஷெட்டி கடுமையாக போராடிய நிலையிலும், 12-21 என்ற கணக்கில் செட்டை இழந்தார். இதன் மூலம் சீனாவின் ஷீ யுகி 21-18, 18-21, 21-12 என்ற செட் கணக்கில் ஆயுஷ் ஷெட்டியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஆயுஷ் ஷெட்டியும் தொடரிலிருந்து வெளியேறினார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித சம்பவம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Smash bros on fire⚡️🔥#MalaysiaOpen2026 pic.twitter.com/NWujg8JWcH
— BAI Media (@BAI_Media) January 7, 2026
இதையும் படிங்க |
இன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பான் வீராங்கனை டோமோஹா மியாசாகியை எதிர்கொள்கிறார். அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீரர்கள் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர், மலேசியாவின் யாப் ராய் கிங், ஜுனைத் ஆரிஃப் இணையை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

