ETV Bharat / sports

கொல்கத்தா - பஞ்சாப் இடையேயான ஐபிஎல்  போட்டி மழையால் கைவிடப்பட்டது

3.4 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு  25 ரன்கள் எடுத்திருந்தபோது,  மழை வந்ததால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

KKR vs PBKS
KKR vs PBKS (@IPL)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 6, 2026 at 11:36 PM IST

1 Min Read
Choose ETV Bharat

கொல்கத்தா: ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதியில் கைவிடப்பட்டது

நடப்பு ஐபிஎல் தொடரின் 12-வது லீக் போட்டி, கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்றிரவு நடைபெற்றது. இதில், ஏற்கெனவே நடந்த 2 போட்டிகளில் வெற்றி கண்ட பஞ்சாப் கிங்ஸ் அணியும், 2 போட்டிகளிலும் தோல்வி கண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே, முதலில் பேட்டிங் செய்வதற்கு விருப்பம் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த அணியின் கேப்டன் ரஹானேவும், ஃபின் ஆலனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 2வது ஓவரிலேயே ஃபின் ஆலனும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேமரூன் கிரீனும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பின்னர், ரஹானேவுடன் ரகுவன்ஷி களமிறங்கி விளையாடினர். 3.4 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை வந்ததால் ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.