ETV Bharat / sports

ஆஷஸ் டெஸ்ட் தொடர்: பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றம் செய்த இங்கிலாந்து

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்
இங்கிலாந்து பிளேயிங் லெவன் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : December 15, 2025 at 1:07 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருக்க நிலையில் ஜோஷ் டங்க்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நடந்து முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றியைப் பதிவு செய்ததுடன், 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 17 ஆம் தேதி அடிலெய்டில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெல்லும் பட்சத்தில், நடப்பு ஆஷஸ் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும். இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியையும அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. இதில் காயம் காரணமாக முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத பாட் கம்மின்ஸ், தற்சமயம் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேற்கொண்டு ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டனாகவும் அவர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக அவர் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால், ஸ்டீவ் ஸ்மித் அணியை வழி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் கஸ் அட்கின்சன் நீக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் டங்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு வில் ஜேக்ஸ், ஜாக் கிரௌலி, ஆலி போப் உள்ளிட்ட வீரர்களும் பிளேயிங் லெவனில் வாய்ப்பை தக்க வைத்துள்ள நிலையில், ஷோயப் பஷிருக்கும் மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகினார். இதனையடுத்து அவருக்கு பதிலாக மேத்யு ஃபிஷருக்கு இங்கிலாந்து டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்சமயம் அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் ஃபிஷருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து பிளேயிங் லெவன்: பென் டக்கெட், ஜாக் கிரௌலி, ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டொக்ஸ்(கேப்டன்), ஜேமி ஸ்மித், வில் ஜேக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஜோஃப்ரா ஆர்ச்சர்.

இதையும் படிங்க:

  1. சையத் முஷ்டாக் அலி கோப்பை: மத்திய பிரதேசத்தை ஒரு ரன்னில் வீழ்த்தி ஜார்கண்ட் த்ரில் வெற்றி
  2. வான்கடேவில் ஜாம்பவான்களின் சங்கமம் - மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை ஜெர்ஸியை பரிசளித்த சச்சின்!

ஆஷஸ் தொடருக்கான அணிகள்

ஆஸ்திரேலிய அணி (மூன்றாவது போட்டிக்கு): பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டாகெட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, நாதன் லையன், மைக்கேல் நெசர், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்

ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஓல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்கு, மேத்யூ ஃபிஷர்*.