விஜய் ஹசாரே கோப்பை 2025-26: காயம் காரணமாக சாய் சுதர்ஷன் விலகல்
தமிழக வீரர் சாய் சுதர்ஷன் காயத்திலிருந்து குணமடைய 6 வார காலம் ஆகும் என்பதால், அவர் ஐபிஎல் தொடரில் கிரிக்கெட் களத்திற்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published : January 3, 2026 at 11:23 AM IST
ஹைதராபாத்: விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தமிழ்நாடு அணி துணை கேப்டன் சாய் சுதர்ஷன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்று வரும் குரூப் ஏ அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியில் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான தமிழ்நாடு அணியில் துணை கேப்டன் சாய் சுதர்ஷன் பிளேயிங் லெவனில் இடம் பிடிக்கவில்லை. இதனால் அவர் ஏன் பிளேயிங் லெவனில் விளையாடவில்லை என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. ஆனால் அவர் காயம் காரணமாக நடப்பு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியுள்ளார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
🚨Sai Sudharsan has suffered a rib fracture during the Vijay Hazare trophy.
— Danish (@BhttDNSH100) January 3, 2026
He is likely to be sidelined for 1 month. pic.twitter.com/eM6hbDgLyB
அதன்படி, மத்தியப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் ரன் ஓடும் போது டைவ் அடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில், சாய் சுதர்ஷனின் காயம் தீவிரமடைந்துள்ளதாகவும், அதிலிருந்து குணமடைய அவருக்கு 6 முதல் 8 வாரங்கள் தேவைப்படும் என்றும் பிசிசிஐ மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அவர் நடப்பு விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நடப்பு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்து தடுமாறி வரும் சூழ்நிலையில், தற்சமயம் அணியின் துணை கேப்டன் சாய் சுதர்ஷனும் தொடரில் இருந்து விலகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், சாய் சுதர்ஷன் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் தான் மீண்டும் களத்திற்கு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் கடந்த ஐபிஎல் சீசனில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்ஷன், இந்திய டெஸ்ட் அணிக்கும் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
🚨 NO SAI SUDHARSHAN IN REMAINING VIJAY HAZARE TROPHY MATCHES 🚨
— MD Raju 🇮🇳 (@MDRaju_Live) January 2, 2026
- Sai Sudharsan is recovering from a rib fracture and is undergoing rehab at the BCCI CoE after getting injured in a VHT match vs Madhya Pradesh. [TOI] 🤯 pic.twitter.com/R3v37buWdH
தமிழ்நாடு அணி: நாராயண் ஜெகதீசன் (கேப்டன்), சாய் சுதர்சன் (துணைக்கேப்டன்), பாபா இந்திரஜித், பிரதோஷ் ரஞ்சன் பால், ஆண்ட்ரே சித்தார்த், பூபதி குமார், முகமது அலி, எஸ்ஆர் அதிஷ், சாய் கிஷோர், சச்சின் ரதி, குர்ஜப்நீத் சிங், சிவி அச்யுத், ஜி கோவிந்த், சோனு யாதவ், சன்னி சந்து, கார்த்திக் மணிகண்டன்.
இதையும் படிங்க |
விஜய் ஹசாரா கோப்பை அணிகள் மற்றும் இடம் பிடித்துள்ள குரூப்-கள்
- குரூப் ஏ - தமிழ்நாடு, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம, ஜார்கண்ட், புதுச்சேரி, திரிபுரா, கெரளா.
- குரூப் பி - ஹைதராபாத், பெங்கால், பரோடா, அஸ்ஸாம், உத்திர பிரதேசம், சண்டிகர், ஜம்மு-காஷ்மீர், விதர்பா.
- குரூப் சி - மஹாராஷ்டிரா, கோவா, ஹிமாச்சல பிரதேசம், பஞ்சாப், மும்பை, உத்திராகண்ட், சிக்கிம், சத்தீஸ்கர்.
- குரூப் டி - ஆந்திர பிரதேசம், ஹரியானா, குஜராத், சௌராஷ்டிரா, டெல்லி, சர்வீசஸ், ஒடிசா மற்றும் ரயில்வேஸ்.

