ETV Bharat / sports

நியூசிலாந்து ஒரு நாள் தொடர்: சாதனைக்காக காத்திருக்கும் இந்திய வீரர்கள்

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வீரர்கள் படைக்க காத்திருக்கும் சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

விராட் கோலி - ரோஹித் சர்மா
விராட் கோலி - ரோஹித் சர்மா (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 10, 2026 at 5:58 PM IST

3 Min Read
Choose ETV Bharat

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை (ஜனவரி 11) வதோதராவில் உள்ள பரோடா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சிகளில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் இந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் படைக்க காத்திருக்கும் சில சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

காலிஸ், இன்சமாமின் சாதனைய முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா அபாரமான ஃபார்மில் உள்ளார். குறிப்பாக கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இதுதவிர, இந்தியாவின் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கோப்பையிலும் அபாரமாக செயல்பட்ட, ரோஹித் சர்மா தற்சமயம் நியூசிலாந்து தொடரில் விளையாட ஆவலுடன் காத்திருகிறார்.

விராட் கோலி - ரோஹித் சர்மா
விராட் கோலி - ரோஹித் சர்மா (IANS)

அதன்படி, இந்த தொடரில் ரோஹித் சர்மா 279 ரன்களை எடுக்கும்பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் மற்றும் பாகிஸ்தானின் இன்சமாம்-உல்-ஹக் ஆகியோரது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். அதன்படி ஜாக் காலிஸ் 11,579 ரன்களையும், இன்சமாம் உல் ஹக் 11,739 ரன்களையும் எடுத்துள்ளார். அதேசமயம் ரோஹித் சர்மா 279 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11,516 ரன்களைக் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி
விராட் கோலி (IANS)

சாதனைகளை குவிக்க காத்திருக்கும் விராட் கோலி

இந்தியாவின் மற்றொரு நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியும் சிறந்த ஃபார்மில் உள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரிலிருந்து அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் அரை சதங்களை கடந்ததுள்ளார். அதில் அவர் இரண்டு சதங்களையும் விளாசியதுடன், தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார். இதுதவிர, விஜய் ஹசாரே கோப்பை தொடரிலும் அவர் தனது அபார ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்த நிலையில், நியூசிலாந்து தொடரில் அவர் 94 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார். முன்னதாக சர்ச்சின் டெண்டுல்கர் 41 இன்னிங்ஸ்களில் 1750 ரன்களை எடுத்ததே இதுநாள் வரையிலும் சாதனையாக இருந்து வருகிறது. அதே சமயம் விராட் கோலி 33 இன்னிங்ஸ்களில் 1,657 ரன்களை எடுத்து அடுத்த இடத்தில் உள்ளார்.

இது தவிர்த்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி சதம் அடிக்கும்பட்சத்தில், அந்த அணிக்கு எதிராக் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைப்பார். இதற்கு முன் வீரேந்திர சேவாக் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் விராட் கோலியும் தலா 6 சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷுப்மன் கில்
ஷுப்மன் கில் (IANS)

ஷுப்மன் கில்

நியூசிலாந்து ஒருநாள் தொடரின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ள இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில்லும் சிறப்பு மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த வகையில் இத்தொடரில் ஷுப்மன் கில் 182 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், அவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை எட்டுவார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.

இதற்கு முன் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஹாஷிம் ஆம்லா 57 இன்னிங்ஸ்களில் 3ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸின் ஷாய் ஹோப் 67 இன்னிங்ஸ்களில் 3ஆயிரம் ரன்களை கடந்து இரண்டாம் இடத்தில் உள்ளார். அதே சமயம் ஷுப்மன் கில் தற்போது வரையில் 58 இன்னிங்ஸ்களில் 2,818 ரன்களைச் சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

200 விக்கெட்டுகள்

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், நியூசிலாந்து தொடரில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றும்பட்சத்தில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தனது 200 விக்கெட்டுகளை பதிவு செய்வதுடன், இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது அதிவேகமான இந்திய வீரர் என்ற பெருமையையும் பெறுவார். இதற்கு முன் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இதுநாள் வரையிலும் சாதனையாக இருந்து வருகிறது.