ETV Bharat / sports

பேட்டிங் சரிவால் ஏற்பட்ட மிகப் பெரிய தோல்வி: இந்திய அணி அடுத்த செய்ய வேண்டியது என்ன?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான படுதோல்வியில் இந்திய அணி செய்த பிழைகள் மற்றும் இனி வரும் போட்டிகளில் செய்ய வேண்டிய விசயங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா
இந்தியா vs தென்னாப்பிரிக்கா (PTI)
author img

By ETV Bharat Sports Team

Published : February 23, 2026 at 5:21 PM IST

4 Min Read
Choose ETV Bharat

அஹமதாபாத்: நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டி இந்திய அணிக்கு மிகப் பெரும் எச்சரிக்கையை வழங்கியுள்ளது. ஏனெனில் இந்த போட்டியில் 187 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி வெறும் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானதுடன், 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியையும் சந்தித்திருந்தது. இது இந்திய அணியின் மிகப்பெரும் தோல்விகளில் ஒன்றாகவும் அமைந்துள்ளது.

மேலும் இந்த தோல்வியானது, இந்திய அணியின் மோசமான பேட்டிங்கை பெரிதளவில் வெளிப்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனம். ஏனெனில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த பேட்டிங் வரிசை, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத நிலையில் அழுத்தத்தைத் தாங்கி ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கையை முழுமையாக சீர்குலைத்துள்ளது.

கனவு தொடக்கங்களும், சரிவுகளும்

இந்த போட்டியில் இந்திய பந்து வீச்சாளர்கள் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் வீரர்களை வெளியேற்றினர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 20 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பவர் பிளேயில் இந்திய அணியின் இந்த ஆதிக்கம் ஆட்டத்தின் போக்கை நிச்சயமாக தீர்மானித்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

ஏனெனில் இந்தியாவுக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது - அவர்கள் நன்றாகத் தொடங்குவார்கள். ஆனால் அதைத் தக்கவைக்க தவறிவிடுவார்கள். டேவிட் மில்லர் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் வந்த போது, அவர்களை தடுத்து நிறுத்த இந்திய அணியிடம் எந்தவொரும் திட்டமும் இல்லை. அதன் விளைவு, அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் தோல்வியடைந்ததுடன், எதிரணியின் ரன் வேகமும் அதிகரித்தது.

இதில் மில்லர் 35 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தது வெறும் இன்னிங்ஸ் மட்டுமல்ல, அது தென்னாப்பிரிக்க அணியை மீட்டெடுத்த ஒரு மறுமலர்ச்சி. மறுபக்கம் பிரேவிஸின் அதிரடியான ஆட்டம் தென்னாப்பிரிக்காவிற்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. 3 விக்கெட்டுக்கு 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அவர்கள் 7 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தனர். இது துரத்தக்கூடிய ஸ்கோராக இருந்தாலும், அதற்கான கட்டமைப்பு அல்லது தன்னம்பிக்கை இந்தியாவிடம் இல்லை.

இந்திய அணியின் பேட்டிங் சரிவு

முதல் இன்னிங்ஸில் இந்தியா கட்டுப்பாட்டை இழந்தால், இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா தன்னைத்தானே இழந்தது போல் தெரிந்தது. பேட்டிங் பயிற்சியாளரும் கூட இந்த ஸ்கோரை துரத்தி வெற்றி பெற முடியும் என்று நம்பினார். ஆனால் சேஸிங் தொடங்குவதற்கு முன்பே ஆட்டத்தின் முடிவானது கண் முன் தெரிந்தது.

  • இஷான் கிஷன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்
  • திலக் வர்மாவும் விரைவாக அவுட் ஆனார்
  • முதல் 7 பந்துகளில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்தது

இந்த இன்னிங்ஸில் பேட்டர்களின் ஷாட் தேர்வு மற்றும் அவர்கள் க்ரீஸை பயன்படுத்திய விதம் இரண்டும் சரியானதாக இல்லை. கேப்டனின் எச்சரிக்கை இருந்த போதிலும், அபிஷேக் சர்மாவால் தனது அனுகுமுறையை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரது பேட்டிங்கின் போது வந்த ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் நம்பிக்கையைத் தந்தன, ஆனால் அவர் விரைவிலேயே விக்கெட்டை இழந்தார்.

அதன் விளைவு சேஸிங்ன் போது இந்திய அணி 57 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது. அதிலும் குறிப்பாக சூர்யகுமார் யாதவின் விக்கெட் ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு. டி20 லீக்குகளில் ஆட்டத்தின் போக்கை எந்த நேரமும் மாற்றக்கூடிய வீரராக இருந்த சூர்யகுமார் யாதவ், இன்றைய போட்டியின் மூலம் பொறுப்பின் சுமையைத் தாங்கிய ஒரு கேப்டனாக காணப்பட்டார். .

அதே சமயம், துணை கேப்டன் அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் எப்படி பிளேயிங் லெவனுக்குள் வந்தார்? என்பது இன்னும் விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. மேற்கொண்டு ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அர்ஷ்தீப் மற்றும் பும்ரா ஆகியோரும் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை இழந்தனர். அந்த சமயத்தில் இந்தியா விக்கெட்டுகளை மட்டும் இழந்து கொண்டிருக்கவில்லை, அவர்கள் அணியின் தோல்வியையும் உறுதி செய்துகொண்டிருந்தனர்.

கட்டமைப்பு சிக்கல்கள்

இந்தத் தோல்வி ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல, இது ஒரு அறிகுறி. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாத நிலையில், இந்த பேட்டிங் வரிசை முதுகெலும்பற்றதாக மாறிவிட்டது. ஏனெனில் அவர்கள் இருவரிடமும் இன்னிங்ஸை எடுத்துச் செல்லும் பன்முகத்தன்மை இருந்தது. ஆனால் தற்போதுள்ள இந்திய அணியில் அந்த வலிமை இல்லை.

பேட்டிங்கில் சுதந்திரத்திற்கும் கவனக்குறைவிற்கும் வித்தியாசம் உள்ளது. ஏனெனில் இந்த அணி டி20 கிரிக்கெட்டில் முந்தைய அனுகுமுறைய அதிகமாக சார்ந்துள்ளது. மேலும் இந்தியாவின் பேட்டிங் சிறந்தது என்பது ஒரு கட்டுக்கதை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் டாப் ஆர்டர் வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைக்கும் போது மட்டுமே அது பயனுள்ளதாக இருந்துள்ளது.

தவிர்க்க முடியாத சில கேள்விகள்?

  • ஃபார்மில் உள்ள ஆல்ரவுண்டர் அக்சர் படேல் ஏன் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டார்?
  • தொடர்ந்து சோபிக்க தவறி வரும் திலக் வர்மாவுக்கு ஏன் மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது?
  • அணியின் மிடில் ஆர்டர் செயல்பாடுகள் திருப்தியளிக்கிறதா?

ஏனெனில் இது தனிப்பட்ட தோல்வி அல்ல, மாறாக அணி கட்டமைப்பின் குறைபாடாகும்.

தென்னாப்பிரிக்காவின் ஆதிக்கம்

ஒரு பக்கம் இந்திய அணி சரிவை சந்திக்கும் போது, மறுபக்கம் தென்னாப்பிரிக்க அணி தங்கள் திட்டங்களில் உறுதியாக இருந்தது. மார்க்ராமின் தலைமையிலானத் தென்னாப்பிரிக்க அணி, கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என்பதை காட்டியது. ஏனெனில் தொடக்கத்தில் அவர்கள் சில விக்கெட்டுகளை இழந்த நிலையிலும், அவர்கள் பேட்டர்களின் தெளிவான அனுகுமுறை வலிமையாக பார்க்கப்படுகிறது.

இது தவிர காகிசோ ரபாடா, லுங்கி இங்கிடி மற்றும் மார்கோ ஜான்சென் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். கேசவ் மகாராஜின் மூன்று விக்கெட்டுகள் இந்தியாவின் மிடில் ஆர்டரை மொத்தமாக சிதைத்துவிட்டது. மேலும் இந்தியா ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தபோதும், தென்னாப்பிரிக்க அணி அதிகமாக கொண்டாடவில்லை. மாறாக அவர்கள் தங்கள் திட்டங்களை சரியாக செயல்படுத்தினர். எனவே, அவர்கள் இறுதிப் போட்டிக்கு வரக்கூடிய ஒரு அணியாக பார்க்கப்படுகின்றனர்.

இந்தியாவின் அடுத்த திட்டம்

இந்த தோல்வியால் இந்தியாவின் வாய்ப்பு முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல. ஆனால் இது வாழ்வா? சாவா? போராட்டத்தில் ஒரு திருப்புமுனை. இப்போது அவர்கள் பெரிய அணிகளை வீழ்த்தும் திறன் கொண்ட ஜிம்பாப்வேயை எதிர்கொள்ள வேண்டும். அடுத்த போட்டியில், இந்தியா வெறும் விருப்பமான அணி மட்டுமல்ல, அதிக அழுத்தத்தையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ளும் அணியாகும். சென்னை ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு திறன் இளம் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.

அணிக்கு தேவையான மாற்றங்கள்

  • பேட்டிங் வரிசையில் அனைவருக்கும் தெளிவான இடத்தை ஒதுக்குதல்
  • டாப் ஆர்டர் வீரர்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்
  • அணித் தேர்வில் தெளிவான மாற்றத்தை கொண்டு வர வேண்டும்

இது போன்ற போட்டிகளில், பிரச்சினைகள் தொழில்நுட்பரீதியாக அல்ல, மன ரீதியாகவே இருக்கும். உலகின் சிறந்த வீரர்களை கூட தங்களால் வீழ்த்த முடியும் என்பதை இந்திய பந்து வீச்சாளர்கள் நிரூபித்துள்ளனர். ஆனால் பந்துவீச்சாளர்களை ஆதரிக்க பேட்டிங் வரிசையில் முதுகெலும்பு இல்லையென்றால், இது போன்ற தோல்விகள் தொடர்ந்து நடக்கும்.

இதையும் படிங்க

அஹமதாபாத் மைதானம் இதற்கு முன்பு இந்தியாவின் வீழ்ச்சிகளைக் கண்டிருக்கிறது. ஆனால் நேற்று கண்டது ஒரு பெரிய பிரச்சனை. ஏனெனில் புகழ் பெற்ற வீரர்கள் இல்லாத நிலையில் தனக்கென ஒரு அடையாளத்தைக் கண்டுபிடிக்க போராடும் ஒரு அணியாக இந்தியா உள்ளது. அதே சமயம் தென்னாப்பிரிக்கா அணி தங்களுக்கான தளத்தை கண்டறிந்துள்ளது.