ETV Bharat / sports

மகளிர் டி20 கிரிக்கெட்: செல்ம்ஸ்போர்டில் இன்று மோதும் இந்தியா vs இங்கிலாந்து

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இதுவரை 37 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இங்கிலாந்து அணி 24 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

இந்திய மகளிர் அணி
இந்திய மகளிர் அணி (AFP)
author img

By ETV Bharat Sports Team

Published : May 28, 2026 at 7:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று செல்ம்ஸ்போர்டில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று செல்ம்ஸ்ஃபோர்ட்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான முன்னோட்டமாக இரு அணிகளும் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்திய மகளிர் அணி

ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி மகளிர் டி20 அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக, இதே மைதானத்தில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 200 ரன்கள் குவித்ததுடன், எதிரணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தும் அசத்தியது. இதன் காரணமாக இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி ஆதிக்கத்தை தொடரும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்ப்ரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், யஷ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ் ஆகியோர் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் பந்துவீச்சில் ரேனுகா சிங், கிராந்தி கவுட், ஸ்ரீசாரணி, ராதா யாதவ், நந்தினி சர்மா, ஸ்ரெயங்கா பாட்டியா, அருந்ததி ரேட்டி ஆகியோர் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து மகளிர் அணி

சார்லி டீன் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி சொந்த மண்ணில் விளையாடும் உத்வேகத்துடன் இந்த தொடரை எதிர்கோள்ள இருக்கிறது. மேலும் அணியின் கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் இந்த தொடரில் விளையாடாத நிலையில், சார்லி டீன் இங்கிலாந்து மகளிர் அணியை வழிநடத்தவுள்ளது. குறிப்பாக முன்னாள் கேப்டன் ஹீதர் நைட் இருக்கும் நிலையிலும், சார்லி டீன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டேனியல் வையட்-ஹாட்ஜ், மையா பௌச்சர், ஹீதர் நைட், ஏமி ஜோன்ஸ், அலிஸ் கேப்ஸி என அதிரடி வீராங்கனைகள் இருப்பது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம் பவுலிங்கைப் பொறுத்தவரையில் சோஃபி எக்லெஸ்டோன், லாரன் பென், லாரன் ஃபில்லர், இஸி வாங், லின்ஸி ஸ்மித் ஆகியோர் இருப்பது எதிரணிக்கு பெரும் சவாலை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.

நேருக்கு நேர்

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் இதுவரை 37 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 24 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்திய அணி 11 போட்டிகளில் மட்டுமே வெற்றியை பதிவு செய்துள்ளது. மேற்கொண்டு இரண்டு போட்டிகளின் முடிவு எட்டபடவில்லை.

நேரலை தகவல்கள்

இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையிலான இந்த டி20 தொடரை இந்திய ரசிகர்கள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையாக காணமுடியும். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பு ரசிகர்கள் சோனி லிவ் ஓடிடி தளத்தில் தொடரை கண்டுகளிக்கலாம். இந்த தொடரின் அனைத்து போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 11 மணிக்குத் தொடங்கும் நிலையில், டாஸ் நிகழ்வு 10.30 மணிக்கு நடைபெறும்.

இதையும் படிக்கவும்

உத்தேச லெவன்

இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்திராகர், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல், ரேணுகா சிங், அருந்ததி ரெட்டி.

இங்கிலாந்து மகளிர் அணி: டேனி வியாட்-ஹாட்ஜ், மையா பௌச்சர், அலிஸ் கேப்ஸி, ஹீதர் நைட், ஆமி ஜோன்ஸ், டேனியல் கிப்சன், சார்லி டீன் (கேப்டன்), சோஃபி எக்லெஸ்டோன், சாரா கிளென், லாரன் பெல், லாரன் ஃபில்லர்.