IND vs WI 3rd T20I: டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ்; இந்திய அணி முதலில் பேட்டிங்!
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷிவம் தூபே, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் பிரின்ஸ் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Published : October 11, 2026 at 6:41 PM IST
இந்தூர்: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.
இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று இந்தூரில் உள்ள ஹோல்கர் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஷாய் ஹோப் முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளார்.
இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் ஷிவம் தூபே, குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் பிரின்ஸ் யாதவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சம பலம் வாய்ந்த இரு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
🚨 Toss 🚨 West Indies have won the toss and elected to bowl first in Indore. Updates ▶️ https://t.co/0ve4uDWSIn #TeamIndia | #INDvWI | @mflone_ https://t.co/sZgvGcq785
— BCCI (@BCCI) October 11, 2026
பிளேயிங் லெவன்
இந்திய அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, நமன் தீர், அக்ஸர் படேல், பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்.
வெஸ்ட் இண்டீஸ் அணி: ஷாய் ஹோப் (கேப்டன்), கமில் பூரன், ஷிம்ரோன் ஹெட்மையர், ரோவ்மேன் பவெல், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், குவென்டின் சாம்ப்சன், கீமோ பால், ரோஸ்டன் சேஸ், ஷமர் ஸ்பிரிங்கர், ஷமர் ஜோசப், குடகேஷ் மோட்டி.
நேருக்கு நேர்
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 21 போட்டிகளில் வெற்றிபெற்று ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதேசமயம் ஒரு போட்டியின் முடிவு எட்டப்படவில்லை.
Here's a look at #TeamIndia's Playing XI for the 3️⃣rd T20I 🙌 Nitish Kumar Reddy and Prince Yadav come into the XI 📝 Updates ▶️ https://t.co/0ve4uDWSIn #INDvWI | @mflone_ https://t.co/B3yG1jMZ2Y
— BCCI (@BCCI) October 11, 2026
| இதையும் படிங்க |
நேரலை விவரம்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்குத் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிடி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் நேரலையில் கண்டுகளிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ-ஹாட்ஸ்டார் ஒடிடி தளத்தில் இந்த போட்டியைக் காண முடியும்.

