ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: அரையிறுதி போட்டிகள் எங்கு, எப்போது? - முழு விவரம் இதோ...
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.


Published : March 3, 2026 at 7:20 PM IST
ஹைதராபாத்: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரின் 2026 சீசனுக்கான அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 10ஆவது சீசன் இந்தியா மற்றும் இலக்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று அவருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், சூப்பர் 8 சுற்றுக்கு பிறகு நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதில் தொடரை நடத்தும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அதிலும் குறிப்பாக ஐடன் மர்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவாமல் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளும் லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகளில் அபாரமாக விளையாடி இந்த அரையிறுதி வாய்ப்பை பெற்றுள்ளன.
அரையிறுதியில் இந்தியா
அதேசமயம் கொல்கத்தாவில் நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பதிவு செய்தது. அதிலும் இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன், 97 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்திருந்தார்.
அரையிறுதி அட்டவணை
இதனையடுத்து மார்ச் 4ஆம் தேதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும், மார்ச் 5ஆம் தேதில் மும்பையில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
𝐀𝐧𝐝 𝐭𝐡𝐞𝐧 𝐭𝐡𝐞𝐫𝐞 𝐰𝐞𝐫𝐞 𝐟𝐨𝐮𝐫 🤩
— ICC (@ICC) March 1, 2026
The #T20WorldCup 2026 semi-finals are locked 🔒
More details➡️ https://t.co/0UKXfuke7c pic.twitter.com/IxJeZvr5M3
இதில் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. முன்னதாக இவ்விரு அணிகளும் 2022, 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தின. இதில் 2022ஆம் ஆண்டு அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது.
அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று இங்கிலாந்திற்கு பதிலடியை கொடுத்திருந்தது. இந்த நிலையில் தற்சமயம் இரு அணிகளும் மீண்டும் ஒரு முறை அரையிறுதியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றியை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
மூன்றாவது பட்டத்தை வெல்லுமா இந்தியா?
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது. அதன்படி இந்த முறையும் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் பட்சத்தில், டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற சாதனையை படைக்கும்.
India's stunning #T20WorldCup victory against West Indies was one for the history books 📝 🤩
— ICC (@ICC) March 1, 2026
Watch how the action unfolded in Kolkata 👉 https://t.co/pgVIlw2hgu pic.twitter.com/YGeErh2Y0H
ஏனெனில் இதுவரை எந்தவொரு அணியும் மூன்று முறை டி20 உலகக் கோப்பையை வென்றது கிடையாது. அதேசமயம் இந்திய அணி முன்னதாக 2007 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இதுதவிர சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெறவும் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
இதையும் படிங்க |
இறுதிப் போட்டி எப்போது?
அரையிறுதி சுற்றில் வெற்றி பெறும் அணிகள், மார்ச் 8ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியானது இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

