ETV Bharat / sports

வெஸ்ட் இண்டீஸின் இமாலய வெற்றி: சூப்பர் 8 சுற்றில் நெருக்கடியை சந்திக்கும் இந்தியா

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் காரணமாக, இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பை மிகவும் கடினமாக்கியுள்ளது.

இந்திய அணி
இந்திய அணி (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 24, 2026 at 2:26 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இதில் குரூப் 1-ல் இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளும், குரூப் 2-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளும் இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில், குரூப் ஒன்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அபாரமான வெற்றிகளை பதிவு செய்ததன் காரணமாக, முதல் இரண்டு இடங்களில் உள்ளதுடன், அரையிறுதிக்கான வாய்ப்பையும் பிரகாசமாக்கியுள்ளன. அதிலும் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக 107 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவு செய்திருந்தது.

இந்த காரணமாக, அந்த அணியின் ரன்ரேட் 5.85ஆகவுள்ளது. மறுபக்கம், தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு எதிராக 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் 3.80 என்ற ரன் ரெட்டை பெற்றுள்ளது. இதனால் இந்திய அணியின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பு பெரும் சிக்கலாக மாறியுள்ளது. ஏனெனில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்வி காரணமாக -3.80 என்றளவில் ரன் ரேட் சரிவை சந்தித்துள்ளது.

இதனால் எஞ்சிய போட்டிகளில் இந்திய அணி இமாலய வெற்றிகளை பதிவு செய்வதுடன், மற்ற அணிகளின் வெற்றி தோல்வியையும் கருத்தில் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, இந்திய அணி தற்சமயம் ரன்ரேட்டில் முன்னிலை பெற வேண்டுமானல், சேஸிங்கில் 185 என்ற இலக்கை 12.5 ஓவர்களில் எட்ட வேண்டும் அல்லது முதலில் பேட்டிங் செய்யும் போது 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும்.

அப்போதும் கூட இந்திய அணி மைனஸ் புள்ளிகளை மட்டுமே தவிர்க்குமே தவிர, இமாலய வெற்றிகள் மூலமாக மட்டுமே முன்னிலை புள்ளிகளை எடுக்க முடியும். ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ஏற்கெனவே 5 மற்றும் 3 ரன் ரேட்டை கொண்டிருப்பதன் காரணமாக, அவர்களுக்கும் அதிமான ரன்ரேட்டை பொரும் பட்சத்தில் மட்டுமே இந்திய அணியின் அரையிறுதி கனவும் நனவாகும்.

இதுதவிர்த்து நாளை மறுநாள் நடைபெறும் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றால் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும். ஒருவேளை அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஏனெனில் இந்திய அணி தங்களுடைய கடைசி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ளவுள்ளது.

எனவே இந்திய அணியின் அரையிறுதி முடிவை தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் போட்டி தான் முடிவு செய்யும் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இந்த போட்டியின் முடிவை எதிர்பார்த்து இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதன் படி இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி பிப்ரவரி 26ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க

டி20 உலகக் கோப்பை குரூப் 1 புள்ளிப்பட்டியல்

அணிகள்

விளையாடிய

போட்டிகள்

வெற்றிதோல்விமுடிவில்லைநெட் ரன் ரேட் (NRR)
வெஸ்ட் இண்டீஸ்1100+5.350
தென்னாப்பிரிக்கா1100+3.800
இந்தியா0010-3.800
ஜிம்பாப்வே1010-5.350

இந்திய அணியின் சூப்பர் 8 அட்டவணை

  • இந்தியா vs ஜிம்பாப்வே - பிப்ரவரி 26 - சென்னை
  • இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் - மார்ச் 1 - கொல்கத்தா