ஜிம்பாப்வேவுக்கு எதிராக அபார வெற்றி: இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்புகள் என்ன?
மார்ச் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.


Published : February 27, 2026 at 10:42 AM IST
ஹைதராபாத்: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அபார வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசமாகியுள்ளது.
இந்தியா-ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டம் நேற்று சென்னையிலுள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபிஷேக் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான அரைசதங்கள் மூலம் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 256 ரன்களை குவித்தது.
அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் பிரையன் பென்னட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதன் காரணமாக ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது. இன்றைய ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கிய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்த நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துள்ளது.
Who will join South Africa and England in the #T20WorldCup semi-finals? 🔥
— ICC (@ICC) February 27, 2026
More 👉 https://t.co/DAEHvrePfd pic.twitter.com/qA0Zi1YoN9
ஏனெனில் நேற்று நடைபெற்ற மற்றொரு சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியானது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி சூப்பர் 8 சுற்றில் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம், அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதிப்பெற்றது. மறுபக்கம் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்தது.
இதுபோன்ற சூழ்நிலையில் தான் தற்சமயம் இந்திய அணியும் வெற்றி பெற தற்போது, அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா இடையே போட்டி நிலவுகிறது. இதையடுத்து மார்ச் 1ஆம் தேதி நடைபெற இருக்கும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதையும் படிங்க |
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக அரையிறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என்பதால் ரசிகர்கள் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இவ்விரு அணிகளும் கூடுதல் கவனத்துடன் இந்த போட்டிக்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
டி20 உலகக் கோப்பை குரூப் 1 புள்ளிப்பட்டியல்
| அணிகள் | விளையாடிய போட்டிகள் | வெற்றி | தோல்வி | முடிவில்லை | நெட் ரன் ரேட் (NRR) |
| தென்னாப்பிரிக்கா | 2 | 2 | 0 | 0 | +2.890 |
| வெஸ்ட் இண்டீஸ் | 2 | 1 | 1 | 0 | +1.791 |
| இந்தியா | 2 | 1 | 1 | 0 | -0.100 |
| ஜிம்பாப்வே | 2 | 0 | 2 | 0 | -4.475 |

