ஹாக்கி உலகக் கோப்பை 2026 | ஸ்பெயினை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியனானது ஜெர்மனி!
இந்த உலகக் கோப்பை தொடரின் 3ஆவது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாம் இடத்தையும், நெதர்லாந்து அணி 4ஆவது இடத்தையும் பிடித்தன.


Published : August 31, 2026 at 11:24 AM IST
ஹைதராபாத்: ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி, தனது 4ஆவது முறையாக உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.
பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்று வரும் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை 2026 தொடரானது கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாகச் செயல்பட்டுக் கோலடிக்க முயற்சித்தனர்.
குறிப்பாக, மிகச்சிறப்பான டிஃபென்ஸை வெளிப்படுத்திய ஸ்பெயின் அணி, ஜெர்மனியின் கோல் முயற்சிகளைத் தொடர்ந்து முறியடித்து வந்தது. மறுபக்கம் ஸ்பெயின் அணியாலும் எதிரணியின் டிஃபென்ஸைத் தாண்டி எந்தவொரு கோலையும் அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக, முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல்கள் ஏதுமின்றி சமநிலையில் நீடித்தன.
4-TIME WORLD CHAMPIONS!!!! 🇩🇪 🏆 🏆 🏆 🏆 🇩🇪
— International Hockey Federation (@FIH_Hockey) August 30, 2026
Die Honamas defend their World Cup and join Pakistan as the most successful side in the history of the Men's FIH Hockey World Cups, with 4 titles to their name!!#HWC2026 #HockeyWorldCup2026 #WorldCup #WorldChampions #Germany pic.twitter.com/ofk5ZNOrl4
அதன்பின் நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் இரு அணிகளும் சரிக்குச் சமமாக மல்லுக்கட்டின. இதில் ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை அந்த அணியின் நட்சத்திர வீரர் மிஷெல் ஸ்ட்ருத்தோஃப் கச்சிதமாகப் பயன்படுத்தி முதல் கோலை அடித்தார். இதன் மூலம் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதேசமயம், மறுபக்கம் ஸ்பெயின் அணி தங்களுக்குக் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்புகளை வீணடித்தது.
இதன் காரணமாக, ஆட்டநேர முடிவில் ஜெர்மனி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனி அணி 4ஆவது முறையாகச் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக ஜெர்மனி அணி 2002, 2006 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
FIH President Tayyab Ikram congratulated the Men’s World Champions:
— International Hockey Federation (@FIH_Hockey) August 30, 2026
“Warm congratulations to Germany on being crowned once again men’s world champions! A remarkable achievement that reflects an exceptional combination of talent, determination, mental strength and relentless hard… pic.twitter.com/7xQFUv3bMK
இதையும் படிக்கவும் |
இறுதிப் போட்டியில் கடுமையான போராட்டத்திற்குப் பின் தோல்வியைத் தழுவிய ஸ்பெயின் அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது. அதேசமயம், இந்த உலகக் கோப்பை தொடரின் 3ஆவது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி மூன்றாம் இடத்தையும், நெதர்லாந்து அணி 4ஆவது இடத்தையும் பிடித்தன. மேலும், இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய ஹாக்கி அணி 8ஆவது இடத்தைப் பிடித்துத் தனது பயணத்தை நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

