ETV Bharat / sports

தொடர்ச்சியாக 5 முறை அரையிறுதி: டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து உலக சாதனை

டி20 உலகக் கோப்பை வரலாற்றில், தொடர்ச்சியாக 5 முறை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.

ஹாரி புரூக்
ஹாரி புரூக் (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : February 25, 2026 at 1:56 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றில் சதம் விளாசிய முதல் கேப்டன் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்துள்ளார்.

ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 164 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக சாஹிப்சாதா ஃபர்ஹான் 63 ரன்களை சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் லியாம் டௌசன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக்கின் அபாரமான சதத்தின் மூலம் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதி சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. மேலும் இந்த போட்டியில் ஹாரி புரூக் ஆட்ட நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் சில சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன.

தொடர்ச்சியாக அரையிறுதிக்கு சென்ற அணி

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில், தொடர்ச்சியாக 5 முறை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.இதன் மூலம் 2016-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நடைபெற்றுள்ள அனைத்து டி20 உலகக் கோப்பை தொடர்களிலும் அந்த அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளது.

தொடர்ச்சியாக அரையிறுதிக்கு சென்ற அணி

அணிகள்அரையிறுதிஆண்டு
இங்கிலாந்து52016-2026*
பாகிஸ்தான்42007-2012
இலங்கை42009-2014

டி20 உலகக் கோப்பை தொடரில் அதிக முறை அரையிறுதிக்கு முன்னேறிய அணிகள்

அணிகள்அரையிறுதிஆண்டுகள்
பாகிஸ்தான்62007,2009,2010,2012,2021,2022
இங்கிலாந்து62010,2016,2021,2022,2024,2026
இந்தியா52007,2014,2016,2022,2024

முதல் கேப்டன்

இந்த போட்டியில் ஹாரி புரூக் அபாரமாக விளையாடி சதம் விளாசி அசத்தினார். இதன் மூலம் டி20 உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் சதம் விளாசிய முதல் கேப்டன் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்துள்ளார். இதற்கு முன் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் எந்த ஒரு கேப்டனும் சதம் அடித்தது கிடையாது. முன்னதாக. 2010ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கேப்டன் கிறிஸ் கெயில் (98 ரன்கள்) மற்றும் 2024ஆம் ஆண்டு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா (92 ரன்கள்) ஆகியோர் சதத்தை நெருங்கிய போதிலும், அந்த மைல்கல்லை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • 100 - ஹாரி புரூக் (இங்கிலாந்து) vs பாகிஸ்தான், பல்லகலே, 2026
  • 98 - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) vs இந்தியா, பிரிட்ஜ்டவுன், 2010
  • 94* - லோர்கன் டக்கர் (அயர்லாந்து) vs ஓமன், கொழும்பு SSC, 2026
  • 92 - ரோஹித் சர்மா (இந்தியா) vs ஆஸ்திரேலியா, பிரிட்ஜ்டவுன், 2024
  • 88 - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) vs ஆஸ்திரேலியா, தி ஓவல், 2009

இதையும் படிங்க

மூன்றாவது இங்கிலாந்து வீரர்

இதுதவிர டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சதம் விளாசிய மூன்றாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் ஹாரி புரூக் பெற்றுள்ளார். இதற்கு முன் 2014ஆம் ஆண்டு அலெக்ஸ் ஹேல்ஸும், 2021ஆம் ஆண்டு ஜோஸ் பட்லரும் இங்கிலாந்து அணிக்காக சதம் விளாசினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் விளாசிய மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் ஹாரி புரூக் பெற்றுள்ளார்.