ETV Bharat / sports

நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு இடமில்லை

நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : January 3, 2026 at 5:12 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கேப்டனாக ஷுப்மன் கில்லும், துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்து அணி இந்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. அதிலும் குறிப்பாக ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், நியூசிலாந்து அணி இந்த டி20 தொடரை எதிர்கொள்ள இருக்கிறது.

அந்த வகையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜனவரி 21ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

மேலும் இந்த தொடருக்கான இந்திய டி20 அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்சமயம் ஒருநாள் தொடருக்கான அணியையும் பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இதில் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரின் போது இருவரும் காயம் காரணமாக விளையாடாத நிலையில், தற்சமயம் காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளதுடன் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது வரையிலும் முழு உடற்தகுதியை எட்டும் பட்சத்தில் மட்டுமே இந்த தொடரில் விளையாடுவார் என்று பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

இது தவிர்த்து அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். அதேசமயம் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடும் ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் நியூசிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இதில் ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக மைக்கேல் பிரேஸ்வெல் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், டி20 அணியின் கேப்டனாக மிட்செல் சான்ட்னர் தொடர்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா vs நியூசிலாந்து தொடருக்கான அணிகள்

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்ஸர் படேல் (துணை கேப்டன்), இஷான் கிஷான், ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர்.

இந்திய ஒருநாள் அணி: ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ரானா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பந்த், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

இதையும் படிங்க

நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவான் கான்வே, ஜேக்கப் டஃபி, ஜக்காரி ஃபால்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், இஷ் சோதி.

நியூசிலாந்து ஒருநாள் அணி: மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவான் கான்வே, ஜக்காரி ஃபால்க்ஸ், மிட்செல் ஹேய், கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.