ETV Bharat / sports

ஃபிபா உலகக் கோப்பை போட்டி முழு அட்டவணை - உலகமே எதிர்நோக்கும் கால்பந்து திருவிழா முழு விவரம்

இந்த கால்பந்து உலகக் கோப்பை தொடரில் 48 அணிகள் 12 குரூப்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குரூப்பில் 4 அணிகள் இடம்பெற்றுள்ளது

ஃபிபா உலகக் கோப்பை
ஃபிபா உலகக் கோப்பை (Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 2, 2026 at 11:52 AM IST

5 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: கால்பந்து விளையாட்டில் மாபெரும் திருவிழாவான ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை வரும் ஜூன் 11ஆம் தேதி தொடங்கி ஜூலை 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் இந்த கால்பந்து உலகக் கோப்பை அமெரிக்கா, கனடா, மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. மூன்று நாடுகளில் மொத்தம் 16 மைதானங்களில் போட்டி நடைபெறுகிறது. இந்த தொடரில் 48 அணிகள் 12 குரூப்களாக பிரிக்கப்பட்டு, ஒரு குரூப்பில் 4 அணிகள் இடம்பெற்றுள்ளது.

போட்டிகள் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணி, அதிகாலை 3.30 மணி, காலை 6.30 மணி, 9.30 மணி ஆகிய நேரங்களில் நடைபெறுகிறது. குரூப் சுற்றின் முடிவில், ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் மற்றும் குரூப் வாரியாக 3ஆம் இடத்தில் உள்ள 8 சிறந்த அணிகளும் அடுத்த சுற்றுக்கு (round 32) தகுதி பெறும். அதன்பிறகு சிறந்த 16 அணிகள் ’ரவுண்ட் 16’ சுற்றுக்கு தகுதிம் பெறும். தொடர்ந்து காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி வரும் ஜூலை 19ஆம் தேதி நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறுகிறது.

கால்பந்து உலகக் கோப்பை குரூப் பட்டியல்

Group A: மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, செக் குடியரசு

Group B: கனடா, சுவிட்சர்லாந்து, கதார், போஸ்னியா, ஹெர்சகோவினா

Group C: பிரேசில், மொராகோ, ஹைதி, ஸ்காட்லாந்து

Group D: அமெரிக்கா, பராக்வே, ஆஸ்திரேலியா, துருக்கி

Group E: ஜெர்மனி, குராசோ, ஐவரி கோஸ்ட், ஈக்வடார்

Group F: நெதர்லாந்து, ஜப்பான், துனிசியா, ஸ்விடன்

Group G: பெல்ஜியம், எகிப்து, ஈரான், நியூஸிலாந்து

Group H: ஸ்பெயின், கேப் வெர்டே, சவுதி அரேபியா, உருக்வே

Group I: பிரான்ஸ், செனகல், நார்வே, ஈராக்

Group J: அர்ஜெண்டினா, அல்ஜீரியா, ஆஸ்திரியா, ஜோர்டான்

Group K: போர்ட்சுகல், உஸ்பெகிஸ்தான், கொலம்பியா, காங்கோ

Group L: இங்கிலாந்து, க்ரோசியா, கானா, பனாமா

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் A)

ஜூன் 11ஆம் தேதி மெக்சிகோ - தென் ஆப்பிரிக்கா (இந்திய நேரப்படி நேரம் இரவு 12.30 மணி)

ஜூன் 11ஆம் தேதி தென் கொரியா - செக் குடியரசு (நேரம் காலை 7.30 மணி)

ஜூன் 18ஆம் தேதி செக் குடியரசு - தென் ஆப்பிரிக்கா (நேரம் இரவு 9.30 மணி)

ஜூன் 19ஆம் தேதி மெக்சிகோ - தென் கொரியா (காலை 6.30 மணி)

ஜூன் 25ஆம் தேதி செக் குடியரசு - மெக்சிகோ (காலை 6.30 மணி)

ஜூன் 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா - தென் கொரியா (காலை 6.30 மணி)

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் B)

ஜூன் 12ஆம் தேதி கனடா - போஸ்னியா (நள்ளிரவு 12.30 மணி)

ஜூன் 13ஆம் தேதி கதார் - சுவிட்சர்லாந்து (நள்ளிரவு 12.30 மணி)

ஜூன் 18ஆம் தேதி சுவிட்சர்லாந்து - போஸ்னியா (நள்ளிரவு 12.30 மணி)

ஜூன் 19ஆம் தேதி கனடா - கத்தார் (அதிகாலை 3.30 மணி)

ஜூன் 24ஆம் தேதி சுவிட்சர்லாந்து - கனடா (நள்ளிரவு 12.30 மணி)

ஜூன் 24ஆம் தேதி போஸ்னியா - கத்தார் (நள்ளிரவு 12.30 மணி)

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் C)

ஜூன் 14ஆம் தேதி பிரேசில் - மொராகோ (அதிகாலை 3.30 மணி)

ஜூன் 14ஆம் தேதி ஹெய்தி - ஸ்காட்லாந்து (காலை 6.30 மணி)

ஜூன் 20ஆம் தேதி ஸ்காட்லாந்து - மொராகோ (அதிகாலை 3.30 மணி)

ஜூன் 20ஆம் தேதி பிரேசில் - ஹெய்தி (காலை 6.00 மணி)

ஜூன் 25ஆம் தேதி ஸ்காட்லாந்து - பிரேசில் (அதிகாலை 3.30 மணி)

ஜூன் 24ஆம் தேதி மொராகோ - ஹெய்தி (அதிகாலை 3.30 மணி)

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் D)

ஜூன் 13ஆம் தேதி அமெரிக்கா - பராக்வே (காலை 6.30 மணி)

ஜூன் 14ஆம் தேதி ஆஸ்திரேலியா - துருக்கி (காலை 9.30 மணி)

ஜூன் 19ஆம் தேதி அமெரிக்கா - ஆஸ்திரேலியா (நள்ளிரவு 12.30 மணி)

ஜூன் 20ஆம் தேதி துருக்கி - பராக்வே (காலை 8.30 மணி)

ஜூன் 26ஆம் தேதி துருக்கி - அமெரிக்கா (காலை 7.30 மணி)

ஜூன் 25ஆம் தேதி பராக்வே - ஆஸ்திரேலியா (காலை 7.30 மணி)

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் E)

ஜூன் 14ஆம் தேதி ஜெர்மனி - குராசோ (இரவு 10.30 மணி)

ஜூன் 15ஆம் தேதி ஐவரி கோஸ்ட் - ஈக்வடார் (காலை 4.30 மணி)

ஜூன் 21ஆம் தேதி ஜெர்மனி - ஐவரி கோஸ்ட் (நள்ளிரவு 1.30 மணி)

ஜூன் 21ஆம் தேதி ஈக்வடார் - குராசோ (காலை 5.30 மணி)

ஜூன் 25ஆம் தேதி குராசோ - ஐவரி கோஸ்ட் (நள்ளிரவு 1.30 மணி)

ஜூன் 25ஆம் தேதி ஈக்வடார் - ஜெர்மனி (நள்ளிரவு 1.30 மணி)

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் F)

ஜூன் 14ஆம் தேதி நெதர்லாந்து - ஜப்பான் (நள்ளிரவு 1.30 மணி)

ஜூன் 15ஆம் தேதி ஸ்விடன் - துனிசியா (காலை 7.30 மணி)

ஜூன் 20ஆம் தேதி நெதர்லாந்து - ஸ்விடன் (இரவு 10.30 மணி)

ஜூன் 21ஆம் தேதி துனிசியா - ஜப்பான் (காலை 9.30 மணி)

ஜூன் 26ஆம் தேதி ஜப்பான் - ஸ்விடன் (காலை 4.30 மணி)

ஜூன் 26ஆம் தேதி துனிசியா - நெதர்லாந்து (காலை 4.30 மணி)

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் G)

ஜூன் 15ஆம் தேதி பெல்ஜியம் - எகிப்து (நள்ளிரவு 1.30 மணி)

ஜூன் 16ஆம் தேதி ஈரான் - நியூசிலாந்து (காலை 6.30 மணி)

ஜூன் 21ஆம் தேதி பெல்ஜியம் - ஈரான் (நள்ளிரவு 12.30 மணி)

ஜூன் 22ஆம் தேதி நியூசிலாந்து - எகிப்து (காலை 6.30 மணி)

ஜூன் 27ஆம் தேதி எகிப்து - ஈரான் (காலை 8.30 மணி)

ஜூன் 26ஆம் தேதி நியூசிலாந்து - பெல்ஜியம் (காலை 8.30 மணி)

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் H)

ஜூன் 15ஆம் தேதி ஸ்பெயின் - கேப் வெர்டே (அதிகாலை 4.30 மணி)

ஜூன் 16ஆம் தேதி சவுதி அரேபியா - உருக்வே (அதிகாலை 3.30 மணி)

ஜூன் 21ஆம் தேதி ஸ்பெயின் - சவுதி அரேபியா (இரவு 9.30 மணி)

ஜூன் 22ஆம் தேதி உருக்வே - கேப் வெர்டே (அதிகாலை 3.30 மணி)

ஜூன் 27ஆம் தேதி கேப் வெர்டே - சவுதி அரேபியா (காலை 5.30 மணி)

ஜூன் 27ஆம் தேதி உருக்வே - ஸ்பெயின் (காலை 5.30 மணி)

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் I)

ஜூன் 16ஆம் தேதி பிரான்ஸ் - செனகல் (நள்ளிரவு 12.30 மணி)

ஜூன் 16ஆம் தேதி ஈராக் - நார்வே (அதிகாலை 3.30 மணி)

ஜூன் 23ஆம் தேதி பிரான்ஸ் - ஈராக் (அதிகாலை 2.30 மணி)

ஜூன் 23ஆம் தேதி நார்வே - செனகல் (அதிகாலை 5.30 மணி)

ஜூன் 26ஆம் தேதி நார்வே - பிரான்ஸ் (நள்ளிரவு 12.30 மணி)

ஜூன் 26ஆம் தேதி செனகல் - ஈராக் (நள்ளிரவு 12.30 மணி)

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் J)

ஜூன் 17ஆம் தேதி அர்ஜெண்டினா - அல்ஜீரியா (காலை 6.30 மணி)

ஜூன் 17ஆம் தேதி ஆஸ்திரியா - ஜோர்டான் (காலை 9.30 மணி)

ஜூன் 22ஆம் தேதி அர்ஜெண்டினா - ஆஸ்திரியா (இரவு 10.30 மணி)

ஜூன் 23ஆம் தேதி ஜோர்டான் - அல்ஜீரியா (காலை 8.30 மணி)

ஜூன் 28ஆம் தேதி அல்ஜீரியா - ஆஸ்திரியா (காலை 7.30 மணி)

ஜூன் 28ஆம் தேதி ஜோர்டான் - அர்ஜெண்டினா (காலை 7.30 மணி)

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் K)

ஜூன் 17ஆம் தேதி போர்ச்சுகல் - காங்கோ (இரவு 10.30 மணி)

ஜூன் 18ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் - கொலம்பியா (காலை 7.30 மணி)

ஜூன் 23ஆம் தேதி போர்ச்சுகல் - உஸ்பெகிஸ்தான் (இரவு 10.30 மணி)

ஜூன் 24ஆம் தேதி கொலம்பியா - காங்கோ (காலை 7.30 மணி)

ஜூன் 28ஆம் தேதி கொலம்பியா - போர்ச்சுகல் (காலை 5 மணி)

ஜூன் 28ஆம் தேதி காங்கோ - உஸ்பெகிஸ்தான் (காலை 5 மணி)

இதையும் படிங்க: உலகக் கோப்பை தொடருக்கான உருகுவே அணி அறிவிப்பு; லூயிஸ் சுவாரஸ் அதிரடி நீக்கம்

ஃபிபா உலகக்கோப்பை 2026 அட்டவணை (குரூப் L)

ஜூன் 18ஆம் தேதி இங்கிலாந்து - க்ரோசியா (நள்ளிரவு 1.30 மணி)

ஜூன் 18ஆம் தேதி கானா - பனாமா (அதிகாலை 4.30 மணி)

ஜூன் 24ஆம் தேதி இங்கிலாந்து - கானா (நள்ளிரவு 1.30 மணி)

ஜூன் 24ஆம் தேதி பனாமா - க்ரோசியா (அதிகாலை 4.30 மணி)

ஜூன் 28ஆம் தேதி பனாமா - இங்கிலாந்து (அதிகாலை 2.30 மணி)

ஜூன் 27ஆம் தேதி க்ரோசியா - கானா (அதிகாலை 2.30 மணி)