ETV Bharat / sports

ரஞ்சி கோப்பை 2026: ஜம்மு காஷ்மீரின் வரலாற்று வெற்றியும்... சாம்பியன்கள் பட்டியலும்...

ரஞ்சி கோப்பை தொடர் வரலாற்றில் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி விளையாடிய முதல் இறுதிப் போட்டியிலேயே சாம்பியன் பட்டத்தை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி
ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி (PTI)
author img

By ETV Bharat Sports Team

Published : February 28, 2026 at 7:39 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி ரஞ்சி கோப்பை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டு ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வலிமை வாய்ந்த கர்நாடகா அணியை வீழ்த்தியதுடன் சாம்பியன் பட்டத்தை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஹூப்ளியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸ்ல் 584 ரன்களைக் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த கர்நாடகா அணி 293 ரன்களில் ஆல் அவுட்டாக, மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடிய ஜம்மு அணி 342 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் காரணமாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அணி 8 முறை ரஞ்சி கோப்பை சாம்பியனான கர்நாடகாவை வீழ்த்தி முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

ஏனெனில் கிட்டத்தட்ட 67 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சி கோப்பையில் அறிமுகமான ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணி, பல தடைகளைத் தாண்டி முதல் முறையாக பட்டத்தை வென்று வரலாற்றைப் படைத்துள்ளது. இது வெறும் கோப்பை மட்டுமல்ல, புதிய நம்பிக்கையின் சின்னமாகவும், முழு பிராந்தியத்திற்கும் ஒரு புதிய தொடக்கமாகவும் உள்ளது.

அந்த அணியின் இந்த வெற்றி எதிர்கால தலைமுறை கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும், மேலும் ஒரு புதிய சகாப்தத்திற்கு வழிவகுக்கும். இந்த நிலையில், ரஞ்சி கோப்பை வரலாற்றில் இதுவரை எந்தெந்த அணிகள் பட்டத்தை வென்றுள்ளன என்பது குறித்து இந்த பட்டியலில் பார்ப்போம்.

ரஞ்சி கோப்பை வென்றவர்களின் பட்டியல்

  • 42 முறை - பம்பாய்/மும்பை
  • 8 முறை - கர்நாடகா/மைசூர்
  • 7 முறை - டெல்லி
  • 5 முறை - மத்தியப் பிரதேசம்/ஹோல்கர்
  • 5 முறை - பரோடா
  • 3 முறை - சௌராஷ்டிரா/நவ்நகர்
  • 3 முறை - விதர்பா
  • 2 முறை - பெங்கால்
  • 2 முறை - தமிழ்நாடு/மெட்ராஸ்
  • 2 முறை - ராஜஸ்தான்
  • 2 முறை - ஹைதராபாத்
  • 2 முறை - மகாராஷ்டிரா
  • 2 முறை - ரயில்வே
  • 1 முறை - ஜம்மு காஷ்மீர்*
  • 1 முறை - உத்தரப் பிரதேசம்
  • 1 முறை - பஞ்சாப்
  • 1 முறை - ஹரியானா
  • 1 முறை - குஜராத்
  • 1 முறை - மேற்கு இந்தியா

ரஞ்சி கோப்பையின் ஒவ்வொரு சீசனிலும் வென்றவர்களின் முழுமையான பட்டியல்:

  • 1934-35: மும்பை
  • 1935-36: மும்பை
  • 1936-37: நவ்நகர்
  • 1937-38: ஹைதராபாத்
  • 1938-39: தெற்கு பஞ்சாப்
  • 1939-40: மகாராஷ்டிரா
  • 1940-41: மகாராஷ்டிரா .
  • 1941-42: மும்பை
  • 1942-43: பரோடா
  • 1943-44: மேற்கு இந்தியா
  • 1944-45: மும்பை அணி
  • 1945-46: ஹோல்கர்
  • 1946-47: பரோடா
  • 1947-48: ஹோல்கர்
  • 1948-49: மும்பை
  • 1949-50: பரோடா .
  • 1950-51: ஹோல்கர் .
  • 1951-52: மும்பை .
  • 1952-53: ஹோல்கர் .
  • 1953-54: மும்பை
  • 1954-55: மெட்ராஸ் (தமிழ்நாடு).
  • 1955-56: மும்பை
  • 1956-57: மும்பை
  • 1957-58: பரோடா
  • 1958-59: மும்பை
  • 1959-60: மும்பை
  • 1960-61: மும்பை
  • 1961-62: மும்பை
  • 1962-63: மும்பை
  • 1963-64: மும்பை
  • 1964-65: மும்பை .
  • 1965-66: மும்பை
  • 1966-67: மும்பை
  • 1967-68: மும்பை
  • 1968-69: மும்பை
  • 1969-70: ராஜஸ்தான்
  • 1970-71: மும்பை
  • 1971-72: மும்பை
  • 1972-73: மும்பை
  • 1973-74: கர்நாடகா
  • 1974-75: மும்பை
  • 1975-76: மும்பை
  • 1976-77: மும்பை
  • 1977-78: கர்நாடகா
  • 1978-79: டெல்லி
  • 1979-80: டெல்லி
  • 1980-81: மும்பை
  • 1981-82: டெல்லி
  • 1982-83: கர்நாடகா
  • 1983-84: மும்பை
  • 1984-85: மும்பை
  • 1985-86: டெல்லி
  • 1986-87: ஹைதராபாத் .
  • 1987-88: தமிழ்நாடு .
  • 1988-89: டெல்லி
  • 1989-90: பெங்கால்
  • 1990-91: ஹரியானா
  • 1991-92: டெல்லி
  • 1992-93: பஞ்சாப்
  • 1993-94: மும்பை
  • 1994-95: மும்பை
  • 1995-96: கர்நாடகா .
  • 1996-97: மும்பை
  • 1997-98: கர்நாடகா
  • 1998-99: கர்நாடகா
  • 1999-00: மும்பை .
  • 2000-01: பரோடா .
  • 2001-02: ரயில்வேஸ்
  • 2002-03: மும்பை
  • 2003-04: மும்பை.
  • 2004-05: ரயில்வேஸ்
  • 2005-06: உத்தரப் பிரதேசம்
  • 2006-07: மும்பை
  • 2007-08: டெல்லி
  • 2008-09: மும்பை
  • 2009-10: மும்பை
  • 2010-11: ராஜஸ்தான்
  • 2011-12: ராஜஸ்தான்
  • 2012-13: மும்பை
  • 2013-14: கர்நாடகா
  • 2014-15: கர்நாடகா
  • 2015-16: மும்பை
  • 2016-17: குஜராத் .
  • 2017-18: விதர்பா
  • 2018-19: விதர்பா
  • 2019-20: சவுராஷ்டிரா
  • 2020-21: கோவிட்-19 தொற்று காரணமாக போட்டி நடத்தப்படவில்லை.
  • 2021-22: மத்தியப் பிரதேசம்
  • 2022-23: சவுராஷ்டிரா
  • 2023-24: மும்பை
  • 2024-25: விதர்பா
  • 2025-26: ஜம்மு காஷ்மீர்

இதையும் படிங்க

ரஞ்சி கோப்பை 2026: கர்நாடகாவை வீழ்த்தி முதல்முறையாக மகுடம் சூடிய ஜம்மு காஷ்மீர்

டி20 உலகக் கோப்பை 2026: ஷேன் வாட்சனின் சாதனையை சமன் செய்த வில் ஜேக்ஸ்