ETV Bharat / sports

போண்டி கடற்கரை சம்பவம்: உயிர் தப்பியது குறித்து விவரித்த இங்கிலாந்து முன்னாள் வீரர்

சிட்டினியிலுள்ள போண்டி கடற்கரையில் யூத மதக் கூட்டத்தின் போது இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

போண்டி கடற்கரை சம்பவம்
போண்டி கடற்கரை சம்பவம் (AP/Getty)
author img

By ETV Bharat Sports Team

Published : December 15, 2025 at 1:32 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: சிட்னியின் பிரபல சுற்றுலாத் தலமான போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், இந்த கொடூரமான சம்பவம் குறித்த விவரங்களைப் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியவிலுள்ள சிட்டினி நகரின் பிரபல சுற்றுலாத் தலமான போண்டி கடற்கரையில் யூத மதக் கூட்டத்தின் போது இரண்டு நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட இருவரில், ஒருவர் காவல் துறையின் பதில் தாக்குதலில் உயிரிழந்தார்.

அதே சமயம், மற்றொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு நாடுகளுடைய கண்டனங்களுக்கும் வழி வகுத்துள்ளது. இந்த நிலையில், இச்சம்பவத்த்லிருந்து உயிர் தப்பிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன், அந்த பயங்கரமான தருணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் நேற்றைய தினம் போண்டி கடற்கரைக்கு சென்றுள்ளார். மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடப்பதற்கு முன்பு அங்குள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே இருந்ததாகவும், துப்பாக்கிச் சப்தம் கேட்டதும் உணவகத்திற்குள் சென்று ஒரு அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டதாகவும் வாகன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "போண்டியில் உள்ள ஒரு உணவகத்தில் மாட்டிக் கொண்டது மிகவும் பயமாக இருந்தது. நான் இப்போது பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடிய மனிதருக்கு மிகப் பெரிய நன்றி... இந்த சம்பவத்தில் உயிர் இழந்த அனைவருக்கும் என்னுடை இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவரது பதிவு சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:

  1. சையத் முஷ்டாக் அலி கோப்பை: மத்திய பிரதேசத்தை ஒரு ரன்னில் வீழ்த்தி ஜார்கண்ட் த்ரில் வெற்றி
  2. வான்கடேவில் ஜாம்பவான்களின் சங்கமம் - மெஸ்ஸிக்கு உலகக் கோப்பை ஜெர்ஸியை பரிசளித்த சச்சின்!

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இருவரும் தந்தை மற்றும் மகன் என்றும், அவர்கள் பெயர் நவீத் அக்ரம் (தந்தை) மற்றும் சஜித் அக்ரம் (மகன்) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் நவீத் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சஜித் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விசாரணையில் இருவரும் பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.