ETV Bharat / sports

பிரெஞ்சு ஓபன் 2026: காலிறுதிக்கு முன்னேறினார் ஸ்வெரவ்; காஸ்பர் ரூட் அதிர்ச்சித் தோல்வி

கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய நார்வேயின் காஸ்பர் ரூட் நான்காவது சுற்றில் தோல்வியைத் தழுவி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

ஜோவ் ஃபொன்சேகா
ஜோவ் ஃபொன்சேகா (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : June 1, 2026 at 5:44 PM IST

1 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: பிரெஞ்சு ஓபன் 2026 டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ஜெர்மனியில் நட்சத்திர வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிவுள்ளார்.

நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரானது பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டத்தில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜெர்மனியில் அலெக்சாண்டர் ஸ்வெரவ், நெதர்லாந்தின் ஜெஸ்பர் டி ஜாங்குடன் மோதினார். இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரவ் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் போராடி கைப்பற்றினார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 6-1 என்ற கணக்கிலும் அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ஸ்வெரவ் 7-6, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் டி ஜாங்கை எளிதாக வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் தொடர்ச்சியாக 6ஆவது முறை காலிறுதிக்கு முன்னேறியும் அசத்தியுள்ளார்.

அதேசமயம் இன்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில், கடந்த முறை இறுதிப்போட்டி வரை முன்னேறிய நார்வேயின் காஸ்பர் ரூட், பிரேசிலைச் சேர்ந்த இளம் வீரரான ஜோவ் ஃபொன்சேகாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபொன்சேகா முதல் செட்டை 7-5 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 7-6 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார்.

தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது செட்டில் காஸ்பர் ரூட் கம்பேக் கொடுத்து 7-5 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றினார். இதனால் இந்த போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது. இறுதியில் ஆட்டத்தின் நான்காவது செட்டையும் ஃபொன்சேகா 6-2 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன் காஸ்பர் ரூட்டிற்கு அதிர்ச்சியளித்தார்.

இதையும் படிக்கவும்

இதன் மூலம் ஃபொன்சேகா 7-5, 7-6, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் காஸ்பர் ரூட்டை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தினார். இந்த அசத்தலான வெற்றியின் மூலம் ஃபொன்சேகா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் காலிறுதிக்கு தகுதி பெற்றும் சாதனை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக ஜாம்பவான் வீரர்களான நோவாக் ஜோகோவிச் மற்றும் காஸ்பர் ரூட் ஆகியோரை வீழ்த்தி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.