ETV Bharat / sports

இந்தியா vs இங்கிலாந்து: வெற்றியை தீர்மானிக்கும் வீரர்கள் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்னென்ன?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த அரையிறுதி ஆட்டத்தை தீர்மானிக்கப்போகும் 5 முக்கிய 'நேருக்கு நேர்' மோதல்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

இந்தியா vs இங்கிலாந்து
இந்தியா vs இங்கிலாந்து (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : March 4, 2026 at 6:06 PM IST

3 Min Read
Choose ETV Bharat

மும்பை: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெற இருக்கும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. உலக டி20 கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் இரு அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகள் வெறும் புள்ளிவிவரங்களால் தீர்மானிக்கப்படுபவை அல்ல; மாறாக அவை ஆடுகளத்தில் நடக்கும் வீரர்களுக்கு இடையிலான தனிப்பட்ட சாதனை மற்றும் போராட்டங்களாலும் தீர்மானிக்கப்படுபவை. அந்தவகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த அரையிறுதி ஆட்டத்தை தீர்மானிக்கப்போகும் 5 முக்கிய 'நேருக்கு நேர்’ மோதல்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

1. வில் ஜாக்ஸ் vs இந்திய ஸ்பின்னர்கள்

இந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நாயகனாக இருப்பவர் வில் ஜேக்ஸ். ஏனெனில் இந்த தொடரில் இதுவரை அவர் தனது பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டுள்ளதுடன் நான்கு முறை ஆட்ட நாயகன் விருதையும் வென்று இங்கிலாந்து அணியின் முதுகெலும்பாக உள்ளார். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அவரது ஆட்டம் சிறப்பாக இருந்துள்ளது.

அதனால் 7 முதல் 15 ஓவர்களில் வில் ஜேக்ஸ் அதிரடியாக விளையாடும் பட்சத்தில் நிச்சயமாக இங்கிலாந்து அணி 190 என்ற ரன்களை கடக்கவும் வாய்ப்புகள் உள்ளன. மறுபுறம், மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இந்தியா ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அதனால் இந்த ஆட்டத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வில் ஜாக்ஸின் அதிரடியை கட்டுப்படுத்துவார்களா? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

2. ஜஸ்பிரித் பும்ரா vs ஜோஸ் பட்லர்

ஜோஸ் பட்லர் பல ஆண்டுகளாக இங்கிலாந்து அணியின் துருப்புச் சீட்டாக இருந்து வருகிறார். அதிலும் பவர் பிளேவில் அவருடைய தொடக்கம், எதிரணியின் திட்டங்களை சிதறடித்துவிடும். அவர் முதல் 6 ஓவர்களில் தனது அதிரடியை காட்டினால் அது இங்கிலாந்து அணி மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க தொடக்க புள்ளியாக அமையும்.

மறுபக்கம் அவருக்கு சவாலாக இருக்கக்கூடியவர் ஜஸ்பிரித் பும்ரா. ஏனெனில் பட்லருக்கு எதிராக ஜஸ்பிரித் பும்ரா அபாரமான புள்ளி விவரங்களை வைத்துள்ளார். குறிப்பாக டெத் ஓவர்களில் பும்ராவின் யார்க்கர்களுக்கு எதிராக, ஜோஸ் பட்லர் முயற்சி செய்யும் சில ஷாட்டுகள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3. சஞ்சு சாம்சன் vs ஜோஃப்ரா ஆர்ச்சர்

சஞ்சு சாம்சன் தற்போது மிகச்சிறந்த ஃபார்மில் உள்ளார். குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 97 ரன்களை குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த இன்னிங்ஸில் அவர் விளையாடிய விதம் இந்திய அணிக்கும், மிடில் ஆர்டர் வீரர்களுக்கும் பெரும் சாதகத்தை வழங்கியுள்ளது.

ஆனால் சஞ்சு சாம்சனுக்கு இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மிகப்பெரும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த ஜனவரி மாதம் நடந்த டி20 தொடரின் போது சஞ்சு சாம்சனை மூன்று முறை ஆர்ச்சர் வீழ்த்தியுள்ளார். இதனால் ஆர்ச்சரின் அதிவேக பவுன்சர்களை சஞ்சு சாம்சன் எப்படி சமாளிக்கிறார் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் தொடக்கம் அமையும்.

4. சூர்யகுமார் யாதவ் vs ஆதில் ரஷித்

மிடில் ஓவர்களில், ஆதில் ரஷித் மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையேயான மோதல் ஆட்டத்தின் பரபரப்பை கூட்டும். ஏனெனில் இங்கிலாந்து பந்துவீச்சில் ரஷித் தனக்கென தனி இடத்தை வைத்துள்ளார். ஏனெனில் அவரது லெக்-பிரேக் மற்றும் கூக்லி பந்துகள் ஒரே மாதிரியான ஆக்‌ஷனை கொண்டிருக்கும் என்பதால் அது பேர்ட்டர்களுக்கு சிரமத்தை அளிக்கும்.

மறுபுறம், சூர்யகுமார் யாதவ் புதுமையான ஷாட்களை அடிப்பதில் மன்னன். அதிலும் சுழற்பந்து வீச்சை அவர் கையாள்வதிலும் சிறப்பாக இருந்துள்ளார். இதனால் இந்த போட்டியில் சூர்யாவின் விக்கெட்டை ஆதில் ரஷித் ஆரம்பத்திலேயே வீழ்த்தினால் அது இங்கிலாந்துக்கு சாதகமாக அமையும். அதேசமயம் சூர்யா நிலைத்து நின்றால் இந்த போட்டியில் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம்.

5. ஹாரி புரூக் vs வருண் சக்ரவர்த்தி

இந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் வருண் சக்ரவர்த்தி மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் இடையேயான மோதல் மிக முக்கியமானது. வேகப்பந்து வீச்சாளர்களை எளிதாக கையாளும் புரூக்கிற்கு, மாயாஜல சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி மிகப்பெரும் சவாலாக இருப்பார் என்று கணிக்கப்படுகிறது.

இதையும் படிங்க

ஏனெனில் வான்கடே மைதானத்தில், விளக்கு ஒளியின் கீழ் பந்து வழக்கத்தை விட சற்று வேகமாக இருக்கும். அதுப்போன்ற சூழ்நிலைகளில் வருண் சக்ரவத்தி போன்ற பந்துவீச்சாளரை எதிர்கொள்ளது உலகின் எந்தவொரு பேட்டருக்கும் கடினமான சாவாலாக இருக்கும். அதனால் புரூக் மற்றும் வருண் சக்ரவர்த்தியின் இடையில் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்களே ஆட்டத்தின் போக்கைத் தீர்மானிப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது.