ஐஎஸ்எல் 2026: அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த சென்னை; தொடர் வெற்றியில் மோகன் பாகன்
சென்னையின் எஃப்சிக்கு எதிரான வெற்றியின் மூலம் மோகன் பாகன் அணி நடப்பு ஐஎஸ்எல் சீசனில் தொடர்ச்சியாக தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது.


Published : February 24, 2026 at 1:43 PM IST
கொல்கத்தா: மோகன் பாகன் அணிக்கு எதிரான ஐஎஸ்எல் லீக் போட்டியில் சென்னையின் எஃப்சி அணி 0-2 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது.
ஐஎஸ்எல் தொடரின் 12 ஆவது சீசனின் லீக் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று கொல்கத்தாவிலுள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற 12 ஆவது லீக் ஆட்டத்தில் மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சென்னையின் எஃப்.சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோல்கள் அடிக்க அடுத்தடுத்து முயற்சிகளை மேற்கொண்ட நிலையிலும், அவர்களின் முயற்சிகளை எதிரணி வீரர்கள் முறியடித்தனர். பின்னர் முதல் பாதியின் கூடுதல் நேரமான 45+4ஆவது நிமிடத்தில் மோகன் பாகன் அணியின் ஜேமி மெக்லரன் கோலடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இதன் மூலம் மோகன் பாகன் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
On a plate! 🍽️
— Indian Super League (@IndSuperLeague) February 23, 2026
Thapa serves up a delightful assist for Jamie Maclaren to score his second goal of the #ISL12 season. 🔥
Watch #MBSGCFC LIVE only on @FanCode and #SonySportsTen2: https://t.co/V2gCnZEaks 📺#JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/pyRhO8Fbqe
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட்ட மோகன் பாகன் அணிக்கு, ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் டிமிட்ரி பெத்ராடோஸ் கோலடித்து அசத்தினார். அதே சமயம் மறுபக்கம் சென்னை அணி வீரர்கள் இந்த போட்டியில் இறுதி வரை கோலடிக்க போராடிய நிலையிலும், அவர்களால் எதிரணியின் டிஃபென்ஸை தாண்டி கோல்களை போட முடியவில்லை.
இதன் மூலம் ஆட்ட நேர முடிவில் மோகன் பாகன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் சென்னையின் எஃப்.சி. அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மோகன் பாகன் அணி நடப்பு ஐஎஸ்எல் சீசனில் தொடர்ச்சியாக தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது. இதன் மூலம் அந்த அணி 6 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.
The Run ⚡️
— Indian Super League (@IndSuperLeague) February 24, 2026
The Finish 🔥
The Swagger 🤯
Dimitri Petratos has arrived in #ISL12! #MBSGCFC | @mohunbagansg pic.twitter.com/MSl9zqP7aZ
இதையும் படிங்க |
அதே சமயம் சென்னையின் எஃப்சி அணியானது நடப்பு சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளதுடன், புள்ளிகள் ஏதுமின்றி 11 ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையின் எஃப்சி அணி தங்களுடைய மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஒடிசா எஃப்சி அணியை எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியிலாவது சென்னை அணி வெற்றி பெற்று, ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா? என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

