மகளிர் கிரிக்கெட்: இந்தியாவை வீழ்த்தி பதிலடி கொடுத்த ஆஸ்திரேலியா
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியின் வெற்றிக்கு உதவிய பெத் மூனி ஆட்ட நாயகி விருதை வென்றார்.


Published : February 24, 2026 at 5:37 PM IST
பிரிஸ்பேன்: இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து தற்சமயம் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதலாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரதிகா ராவல் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஷஃபாலி வர்மா 4 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 8 ரன்களிலும் என ஆட்டமிழந்தனர். பின்னர் ஸ்மிருதியுடன் இணைந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தார்.
Richa Ghosh had to depart after Georgia Voll dived for a beauty! #AUSvIND pic.twitter.com/exiCjYezlP
— cricket.com.au (@cricketcomau) February 24, 2026
இதில் இருவரும் தங்களின் அரை சதங்களை பதிவு செய்த நிலையில், ஸ்மிருந்தி மந்தனா 58 ரன்களிலும், ஹர்மன்ப்ரீத் கவுர் 53 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய வீராங்கனைகளில் காஷ்வி கௌதம் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 43 ரன்களை சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 48.3 ஓவர்களில் 214 ரன்களை சேர்த்து ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 3 விக்கெட்டுகளையும், மேகன் ஷட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி மற்றும் போப் லிட்ச்ஃபீல்ட் இணை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர்.
இதில் லிட்ச்ஃபீல்ட் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜார்ஜியா வோல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். மேற்கொண்டு அரைசதம் கடந்து விளையாடி வந்த அலிசா ஹீலியும் 50 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஜோடி சேர்ந்த பெத் மூனி-அனபெல் சதர்லேண்ட் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Beth Mooney dominated with 76 in the chase, but it was this six that was the shot of the day!@nrmainsurance | #PlayoftheDay | #AUSvIND pic.twitter.com/WD6ZSmJg0a
— cricket.com.au (@cricketcomau) February 24, 2026
இதையும் படிங்க |
இதில் அரை சதம் கடந்து விளையாடி வந்த பெத் மூனி 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 76 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதி வரை களத்தில் இருந்த அனபெல் சதர்லேண்ட் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 48 ரன்களை சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 38.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியையும் பதிவு செய்தது.

