ETV Bharat / sports

ஆஸ்திரேலிய ஓபன் 2026: எகிறியது வெற்றியாளர்களுக்கான பரிசுத்தொகை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு $4.15 மில்லியன் ஆஸ்திரேலிய டார்கள் (ரூ.25.13 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் 2026
ஆஸ்திரேலிய ஓபன் 2026 (AP)
author img

By ETV Bharat Sports Team

Published : January 6, 2026 at 1:18 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ஹைதராபாத்: எதிர்வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகையானது $111.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.

டென்னிஸ் விளையாட்டின் பாரம்பரிய மற்றும் புகழ்பெற்ற கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்று ஆஸ்திரேலிய ஓபன். கடந்த 1905ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டென்னிஸ் தொடரானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் நகரில் நடத்தப்பட்டு வருகிறது. உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் இந்த தொடரில் பங்கேற்பார்கள் என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தே காணப்படும்.

அந்தவகையில் 2026ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரானது எதிவரும் ஜனவைரி மாதம் 12ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில், இறுதிப்போட்டியானது பிப்ரவரி 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் இந்த தொடரில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்லுவார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில், இந்த தொடருக்கான பரிசுத்தொகையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிவரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகையானது $111.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.675 கோடியாகும். மேலும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒட்டுமொத்த பரிசுத்தொகையானது $96.15 மில்லயன் ஆஸ்திரேலிய டார்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர்த்து ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு $4.15 மில்லியன் ஆஸ்திரேலிய டார்கள் (ரூ.25.13 கோடி) பரிசுத்தொகையாக வழங்கப்படவுள்ளது. இது முந்தைய சீசனைக் காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். முன்னதாக கடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு $3.5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, இறுதிப்போட்டியில் தோல்வியடையும் வீரர்களுக்கு $2.15 மில்லியனும் (தோராயமாக ரூ.13 கோடி), அரையிறுதி போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு $1.25 மில்லியனும் (தோராயமாக ரூ.7.5 கோடி) வழங்கப்படவுள்ளது. மேற்கொண்டு தகுதிச்சுற்று போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான பரிசுத்தொகையையும் 16 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாகவும் ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய ஓபன் 2026 பரிசுத்தொகை விவரம் (ஆஸ்திரேலிய டாலர்களில்)

  • மொத்த பரிசுத்தொகை - $111.5 மில்லியன்
  • வெற்றியாளர்: $4.15 மில்லியன் (+19%)
  • இரண்டாம் இடம் : $2.15 மில்லியன் (+13%)
  • அரையிதிப் போட்டி: $1.25 மில்லியன் (+14%)
  • காலிறுதிப் போட்டி: $750 ஆயிரம் (+13%)
  • நான்காவது சுற்று: $480 ஆயிரம் (+14%)
  • மூன்றாவது சுற்று: $327.75 ஆயிரம் (+13%)
  • இரண்டாவது சுற்று: $225 ஆயிரம் (+13%)
  • முதல் சுற்று: $150 ஆயிரம் (+14%)

இதையும் படிங்க

தகுதிச் சுற்றுக்கான பரிசுத் தொகை (ஒவ்வொரு சுற்றுக்கும்):

  • தகுதிச்சுற்று மூன்று: $83.5 ஆயிரம் (+16%)
  • தகுதிச்சுற்று இரண்டு: $57 ஆயிரம் (+16%)
  • தகுதிச்சுற்று ஒன்று: $40.5 ஆயிரம் (+16%)