சிட்னி டெஸ்ட்: இங்கிலாந்து vs ஆஸ்திரேலியா நாளை மோதல்- வெற்றி யாருக்கு?
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம்.

Published : January 3, 2026 at 4:25 PM IST
ஹைதராபாத்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நாளை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபாரமான வெற்றியைப் பதிவு செய்ததுடன், 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஜனவரி 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று ஆஷஸ் டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்ற முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியும் பதிலடி கொடுக்கும் முனைப்பிலும் விளையாடும் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Todd Murphy touches on his journey back to the Australian Test squad 🙌#UnplayablePodcast | @Qantas pic.twitter.com/FS2FUpq8si
— cricket.com.au (@cricketcomau) January 3, 2026
ஆஸ்திரேலிய அணி
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி கடந்த போட்டியில் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. இதனால் இப்போட்டியில் வெற்றி பெறுவதுடன், தொடரையும் வெற்றியுடன் முடிக்க அந்த அணி விரும்பும். இதனால் நிச்சயம் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்பதை எதிர்பார்க்கலாம்.
அணியின் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கில்ஸ், மார்னஸ் லபுஷாக்னே, அல்கெஸ் கேரி, கேமரூன் க்ரீன் உள்ளிட்டோர் உள்ளனர். பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க் உடன் இணைந்து ஜெய் ரிச்சர்ட்சன், மைக்கேல் நேசர், ஸ்காட் போலண்ட் ஆகியோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
🗣️ " today, as much as it means to us as players, i know what that’s going to mean to all the travelling fans."
— England Cricket (@englandcricket) December 27, 2025
our skipper hails our incredible support and reflects on victory in the boxing day test 👊 pic.twitter.com/en7wTxJorG
இங்கிலாந்து அணி
மறுபக்கம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி 18 ஆண்டுகளுக்கு பிறகு மெல்போர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியை வென்ற உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்ள இருக்கிறது. மேலும் தொடரை இழந்துள்ள அந்த அணி, இப்போட்டியில் வெற்றி பெற்று ஆறுதலைத் தேடும் என்ற எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இருப்பினும் அணியின் முக்கிய பந்துவீச்சாளர் காயம் காரணமாக அடுத்தடுத்து தொடரில் இருந்து விலகியுள்ளது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த போட்டியில் ஷோயப் பஷீர், மேத்யூ பாட்ஸ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Australia has released its squad for Sydney, but do they need to make any moves for the next #Ashes Test?
— cricket.com.au (@cricketcomau) January 1, 2026
More: https://t.co/5RRzXKNq8Q pic.twitter.com/39cpBpknbn
பிட்ச் ரிப்போர்ட்
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் ஐந்தாவது போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. பேட்டர்களுக்கு சாதகமான இந்த மைதானத்தில் இதுவரை 115 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 47 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. அதேசமயம் 44 போட்டிகளில் சேஸிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இதனால் போட்டியின் முடிவில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
நேருக்கு நேர்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரு அணிகளும் 365 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி 154 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 113 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், 97 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன.
ஆஷஸ் டெஸ்ட் தொடரை பொறுத்தவரையில் இரு அணிகளும் 74 தொடர்களில் விளையாடியுள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 35 தொடர்களையும், இங்கிலாந்து அணி 32 தொடர்களையும் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், 7 தொடர்கள் டிராவில் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
➡️ Shoaib Bashir
— England Cricket (@englandcricket) January 2, 2026
➡️ Matthew Potts
We've named our 12-man squad for the fifth and final Ashes Test against Australia 👇
நேரலை தகவல்கள்
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரை இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் காணலாம். அதேசமயம் ஜியோ ஹாட் ஸ்டாரிலும் இத்தொடரை ஆன்லைனில் காண முடியும். இந்திய நேரப்படி போட்டி அதிகாலை 5 மணிக்கு தொடக்க இருக்கும் நிலையில், டாஸ் நிகழ்வானது 4.30 மணிக்கு நடைபெறும்.
பிளேயிங் லெவன்
ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், ஜேக் வெதர்லெட், மார்னஸ் லபுஷாக்னே, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், பிராண்டன் டகேட், ஜெய் ரிச்சர்ட்சன்.
இங்கிலாந்து பிளேயிங் 12: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தெல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிரௌலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்
இதையும் படிங்க |
ஆஷஸ் தொடருக்கான அணிகள்
ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, பிரெண்டன் டகேட், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுஷாக்னே, டாட் மர்ஃபி, மைக்கேல் நெசர், ஜெய் ரிச்சர்ட்சன், மிட்செல் ஸ்டார்க், ஜேக் வெதரால்ட், பியூ வெப்ஸ்டர்
இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, பென் டக்கெட், வில் ஜாக்ஸ், ஓல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டங்கு, மேத்யூ ஃபிஷர்.

