இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்| ராஞ்சியில் பொழிந்த சிக்ஸர் மழை; டி20 வரலாற்றில் பதியப்பட்ட சாதனைகள்!
இந்தியாவிற்கு எதிரான இப்போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிவேக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஷாய் ஹோப் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.


Published : October 10, 2026 at 1:35 PM IST
ஹைதராபாத்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 250 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, சஞ்சு சாம்சனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்களைக் குவித்தது. இதில் இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர், 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு, கேப்டன் ஷாய் ஹோப் மற்றும் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்திப் பதிலடி கொடுத்தது. இதில் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த ஷாய் ஹோப், வெறும் 45 பந்துகளில் சதம் விளாசி (102* ரன்கள்) மிரட்டினார். அவருக்கு உறுதுணையாக ஆடிய ரூதர்ஃபோர்ட் 7 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் குவித்தார்.
𝙎𝙞𝙢𝙥𝙡𝙮 𝙎𝙖𝙢-𝙨𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 🫡 Relive▶️ https://t.co/BTmW1q4p8t #TeamIndia | #INDvWI | @mflone_ | @IamSanjuSamson https://t.co/yORVCVcwji
— BCCI (@BCCI) October 9, 2026
இவர்களின் அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. இப்போட்டியில் சதம் விளாசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஷாய் ஹோப் ஆட்டநாயகன் விருதை வென்றார். மேலும் இப்போட்டியில் பல்வேறு உலகச் சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளன.
இப்போட்டியில் தகர்க்கப்பட்ட முக்கிய உலகச் சாதனைகள்..,
வரலாற்று ரன் சேஸ்
சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிகக் கடினமான இலக்குகளில் ஒன்றான 250 ரன்களை சேஸ் செய்து வெஸ்ட் இண்டீஸ் அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்திய மண்ணில் இந்தியாவிற்கு எதிராக சேஸ் செய்யப்பட்ட மிகப்பெரிய இலக்கு இதுவேயாகும். மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய இலக்காகவும் இது அமைந்துள்ளது.
A chase for the ages! 🤩🤩🤩 Raw emotions from our stellar run chase 💥✨ #INDvWI | #MenInMaroon | #Milestone https://t.co/y3ftvq3e2e
— Windies Cricket (@windiescricket) October 10, 2026
வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட டி20 இலக்குகள்
- 259 – தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், செஞ்சூரியன், 2023
- 250 – வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, ராஞ்சி, 2026
- 244 – ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து, ஆக்லாந்து, 2018
- 244 – பல்கேரியா vs ஜிப்ரால்டர், சோபியா, 2025
- 243 – பல்கேரியா vs செர்பியா, சோபியா, 2022
501 ரன்கள் த்ரில்லர்
இந்த ஒரே போட்டியில் இரு அணிகளும் இணைந்து ஒட்டுமொத்தமாக 501 ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய ரன் விருந்தளித்தன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் 500 ரன்களைக் கடப்பது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் 2023ஆம் ஆண்டு செஞ்சூரியனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்கா-வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் 517 ரன்கள் குவிக்கப்பட்டதே இதுநாள் வரையிலும் சாதனையாக உள்ளது.
டி20 போட்டிகளில் அதிகபட்ச ரன்கள்
- 517 – தென்னாப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ், செஞ்சூரியன், 2023
- 501 – இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ், ராஞ்சி, 2026
- 499 – இந்தியா vs இங்கிலாந்து, மும்பை
- 496 – இந்தியா vs நியூசிலாந்து, திருவனந்தபுரம், 2026
- 489 – வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா, லாடர்ஹில், 2016
அதிவேக சதம் (வெஸ்ட் இண்டீஸ்)
இந்தியாவிற்கு எதிரான இப்போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசியதன் மூலம், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிவேக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஷாய் ஹோப் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ஜான்சன் சார்லஸ் 39 பந்துகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The Skipper on fire from start to finish!🔥🔥🏏 #INDvWI | #MenInMaroon https://t.co/cG7kJ1eOFf
— Windies Cricket (@windiescricket) October 9, 2026
| இதையும் படிங்க |
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிவேக டி20 சதங்கள்
39 பந்துகள் – ஜான்சன் சார்லஸ் vs தென் ஆப்பிரிக்கா, செஞ்சூரியன், 2023
45 பந்துகள் – ஷாய் ஹோப் vs இந்தியா, ராஞ்சி, 2026
47 பந்துகள் – கிறிஸ் கெயில் vs இங்கிலாந்து, மும்பை, 2016
48 பந்துகள் – எவின் லூயிஸ் vs இந்தியா, லாடர்ஹில், 2016
50 பந்துகள் – கிறிஸ் கெயில் vs தென் ஆப்பிரிக்கா, ஜோஹன்னஸ்பர்க், 2007

