ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் அறிவிப்பு
உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஓட்னீயல் பார்ட்மேன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

Published : January 3, 2026 at 9:27 AM IST
ஹைதராபாத்: ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஐடன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும், சிக்கந்த ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.
அந்தவகையில், கடந்தாண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறியும் கோப்பையை தவறவிட்ட தென்னாப்பிரிக்க அணி, இம்முறை கோப்பையை வெல்லுமா? என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 15 பேர் அடங்கிய தென்னாப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
🚨 SQUAD ANNOUNCEMENT 🚨
— Proteas Men (@ProteasMenCSA) January 2, 2026
The South African Men’s selection panel has announced the 15-player squad for the ICC Men’s T20 World Cup 2026, to be held in India and Sri Lanka from 07 February - 08 March.
T20 International (T20I) captain Aiden Markram will lead the side, which… pic.twitter.com/EqZvYPpCga
இந்த அணியின் கேப்டனாக ஐடன் மார்க்ரம் தொடர்கிறார். மேலும் இந்த அணியின் அதிரடி பேட்டர்கள் டெவால்ட் பிரேவீஸ், குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஸி, டேவிட் மில்லர், டோனவன் ஃபெரீரா ஆகியோரும், காகிசோ ரபாடா, ஆன்ரிச் நோர்ட்ஜே, மார்கோ ஜான்சன், லுங்கி இங்கிடி ஆகியோருடன் கேசவ் மஹாராஜ், ஜார்ஜ் லிண்டே உள்ளிட்ட சுழற்பந்து வீச்சார்களுக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நட்சத்திர வீரர்கள் ரியான் ரிக்கெல்டன், டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேசமயம், கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பிடித்திருந்த ரீஸா ஹென்றிக்ஸ், தப்ரைஸ் ஷம்ஸி, ஓட்னியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்டோருக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை. மேலும் ஹென்ரிச் கிளாசென் டி20 கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்ததன் காரணமாக இந்த அணியில் சேர்க்கப்படவில்லை.
Zimbabwe name squad for ICC Men’s T20 World Cup 2026
— Zimbabwe Cricket (@ZimCricketv) January 2, 2026
Details 🔽https://t.co/21vKDRQItq pic.twitter.com/dqIFlDwJzh
இதுதவிர, இந்த தொடரில் பங்கேற்கும் ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக சிக்கந்தர் ரஸா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பிளெசிங் முசரபானி, ரியான் பர்ல், பிரையன் பென்னெட், பிராண்டன் டெய்லர், தியான் மேயர்ஸ், ரிச்சர்ட் ந்ங்கரவா உள்ளிட்ட வீரர்கள் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர்.
இதையும் படிங்க |
டி20 உலகக் கோப்பைக்கான அணிகள்
தென்னாப்பிரிக்கா: ஐடன் மார்க்ராம்(கேப்டன்), குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, டெவால்ட் பிரேவிஸ், டேவிட் மில்லர், டொனோவன் ஃபெரீரா, மார்கோ ஜான்சன், கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, குவேனா மபாகா, லுங்கி இங்கிடி, ஜேசன் ஸ்மித், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ஆன்ரிச் நோர்ட்ஜே.
ஜிம்பாப்வே: சிக்கந்தர் ரஸா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், கிரேம் க்ரீமர், பிராட்லி எவன்ஸ், கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமானி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிளெஸிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, பிரெண்டன் டெய்லர்.

