ETV Bharat / spiritual

தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிதான் - எந்த ராசிக்காரர்களுக்கு தெரியுமா?

டிசம்பர் 8 ஆம் தேதி வியாழக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 8, 2026 at 6:51 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மேஷம்: உங்கள் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வாய்ப்பு அதிகம் உள்ளது. முடிக்கப்படாமல் இருந்த பணிகளை நீங்கள் நிறைவு செய்வீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொது சேவையில் இருப்பவர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாளாக இருக்கும்

ரிஷபம்: இன்றைய தினம் ஒரு ஆக்கபூர்வமான போட்டி நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் செயல்திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேல் அதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்ய ஆர்வமாக இருப்பார்கள். நீங்கள் மேற்கொள்ள உள்ள பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

மிதுனம்: நீங்கள் உங்கள் மூளை சொல்வதை விட, மனம் சொல்வதை தான் அதிகம் கேட்பீர்கள். பல்வேறு உணர்வுகளால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். இதனால் நல்லவை, கெட்டவை இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும். எனினும், மாலை நேரத்தில் நிலைமை மேம்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

கடகம்: இன்றைய தினம் பிரகாசமான வருங்காலத்திற்கான திட்டத்துடன் தொடங்குவீர்கள். உத்திகளை திறமையாக சிந்தித்து அமல்படுத்துவீர்கள். முறையாக எடுக்கப்பட்ட முடிவுகளின் மூலம் நேரத்தை சேமிப்பீர்கள். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும்.

சிம்மம்: புதிய திட்டங்களை எடுத்துக்கொண்டு திறமையாக செயல்படுவீர்கள். அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தனிப்பட்ட உறவுகளில் பாதிப்புகள் ஏற்பட்டாலும், அது தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் வெற்றிகரமாக தீர்த்து விடுவீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும்.

கன்னி: குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள். பரிவர்த்தனைகளை கையாளும்போது, பேச்சு திறன் காரணமாக அனைத்து சச்சரவுகளையும் சுமுகமாக முடித்து வைப்பீர்கள். நடுநிலையுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நீங்கள் புரிந்து கொள்வீகள்.

துலாம்: இன்றைய தினம் உணவின் மீது உங்களது ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் ஆசைகளை பூர்த்தி செய்யும் வகையில் இன்று நீங்கள் பலவிதமான உணவுகளை சுவைத்து மகிழ்வீர்கள். தொழில் துறையில் சிறிது குழப்பநிலை நிலவலாம். எனினும், பலவிதமான வழிகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

விருச்சிகம்: இன்று பட்டாம்பூச்சி போல் இருப்பீர்கள். வம்பு பேச்சுகளை போக்கி சமூகக் குழுக்களில் அன்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவீர்கள். நாம் என்ன கொடுக்கிறோமோ அது தான் கிடைக்கும். மகிழ்ச்சியை பரப்பினால் நமக்கு மகிழ்ச்சியை கிடைக்கும்.

தனுசு: பணியில் நீங்கள் உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் வேலை செய்வீர்கள். உங்கள் வேலைபளு அதிகரிக்கக்கூடும். வேலை செய்வதிலும் ஆர்வம் அதிகம் இருக்கும். நாளின் பிற்பகுதியில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குதுகலத்துடன் மாலையை அனுபவிக்கவும்.

மகரம்: இன்றைய தினம் உங்களுக்கு வரும் வாய்ப்பு எதையும் நீங்கள் தவறவிடாமல் கவனமாக செயல்படுத்துவீர்கள். சட்டம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் தரகர் அல்லது ஒப்பந்தகாரர் என்றால், நஷ்டம் ஏற்படும் வாய்ப்புண்டு. இது பெரிய அளவிலான நஷ்டமாகவும் இருக்கலாம்.

கும்பம்: நீங்கள் உங்கள் குடும்பத்தினரை மிகவும் விரும்புவீர்கள். அவர்களுடன் ஒன்றாக நேரம் செலவழிப்பீர்கள். அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொடுத்து சந்தோஷப்படுத்துவீர்கள்.

மீனம்: இன்று நீங்கள் மக்களிடம் அனுதாப மனப்பான்மையுடன் நடந்து கொள்வீர்கள். இதனால் சிலரின் ஆசிகளைப் பெறுவீர்கள். நீங்கள் நல்ல மேலதிகாரியாக, நல்ல சக பணியாளராக, கணவனாக அல்லது மனைவியாக மற்றும் நல்ல மகன் அல்லது மகளாக உங்களை நிரூபிப்பீர்கள். இந்த நல்ல தன்மையை நீங்கள் கை விடாமல் இருக்க வேண்டும்.