ETV Bharat / spiritual

காதல் திருமணம் செய்யும் யோகக்காரர்கள் இவர்கள் தான் - இன்றைய ராசிபலன்

மார்ச் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 1, 2026 at 7:00 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மேஷம்: உடல் நலன் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். எனினும், இன்று புதிதாக ஏதாவது ஒரு உணவை சுவைத்து பார்க்க விருப்பப்படலாம். பல நாட்களாக பார்க்காத நண்பர்களுடன் வெளியில் செல்ல வாய்ப்புண்டு.

ரிஷபம்: இன்று உங்களது நெருங்கிய நண்பர்கள், குறிப்பாக எதிர்பாலினத்தை சேர்ந்த நண்பர்கள் பற்றி அதிகமாக சிந்திப்பீர்கள். திடீரென்று நீங்கள் காதல் வயப்பட்டுள்ளதை உணர்வீர்கள். காதலை ஏற்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால், பயன்படுத்திக் கொள்ளவும். விரைவில் திருமண உறவு கைகூடும்.

மிதுனம்: மற்றவர்கள் உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பார்கள். அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது சற்று கடினமாக இருக்கலாம். எனினும், அதற்கான வழி கிடைக்கும். மக்கள் உங்கள் செயல்திறனையும், அறிவுத்திறனையும் போற்றுவார்கள்.

கடகம்: இன்று மாற்றம் உங்களுக்காக காத்திருக்கிறது. பொறுமையை கடைப்பிடிக்கவும். சூழ்நிலைக்கு ஏற்ப, உங்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டால், வேலை எளிதாகும்.

சிம்மம்: இன்று அனைத்து தரப்பிலிருந்தும் புகழ்ச்சியை பெறுவீர்கள். அதற்காக, இன்று நடக்கும் அனைத்து விஷயங்களும், உங்களுக்கு சந்தோஷத்தை தரும் என்று கூற முடியாது. சில கேள்விகளுக்கு இன்று விடை காண்பீர்கள். தனிப்பட்ட இழப்பின் காரணமாக, உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்படுவீர்கள்.

கன்னி: இன்று தனிப்பட்ட வாழ்க்கை மீது அதிக கவனம் செலுத்துவீர்கள். அதுதொடர்பான விஷயங்கள் குறித்த எண்ணங்கள் உங்கள் மனதில் ஏற்படும். வர்த்தகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்பட வேண்டும். மாலையில் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும். கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

துலாம்: இன்று பலவிதமான மன நிலைகளால் பாதிக்கப்படுவீர்கள். மாலை வரை மனக் குழப்பங்கள் இருக்கும். அதன்பிறகு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. மிகச்சிறந்த நிகழ்வு ஒன்று ஏற்படக்கூடும் என்றாலும், பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் மனநிலையுடன் இருக்கவும்.

விருச்சிகம்: உங்களது செயலே உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்தும். இன்று உணர்வுகளை அதிகமாக வெளிப்படுத்துவீர்கள். தொழிலில் புதிய திட்டங்களை உற்சாகத்துடன் தொடங்குவீர்கள். ஆனால், எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

தனுசு: இன்று அனைத்து தரப்பிலும் வெற்றி கிடைக்கும். எந்த சவால்களை எடுத்துக் கொண்டாலும், அதை வெல்வீர்கள். உங்களிடம் ஆலோசனை கேட்கும், சக பணியாளர்களுக்கும் சிறந்த ஆலோசனைகளை வழங்கி, வழிகாட்டுவீர்கள். இந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மகரம்: உணர்வுரீதியாக செயல்படுவது, பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். அது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் ஆகிய இரண்டையும் பாதிக்கும். இதை பயன்படுத்தி சுற்றி இருப்பவர்கள் உங்களை வீழ்த்த முயற்சி செய்யலாம். அதனால் உணர்வுகளை கட்டுப்படுத்தி, வெற்றிக்கான பாதையில் முன்னேறிச் செல்லவும்.

கும்பம்: உங்களது செயல் மற்றும் தீவிரமான நடவடிக்கை, உங்கள் போட்டியாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நீங்கள் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வீர்கள், அதனால் அனைத்து தடைகளும் நீங்கும். உங்கள் வெற்றி, கருணை மற்றும் கடின உழைப்பின் காரணமாக அனைவரது மனதையும் வெல்வீர்கள்.

மீனம்: இன்று உணர்வுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். கேள்விகளுக்கான பதில்களை பெற, உங்களை நீங்களே ஆராய்ந்து கொள்வீர்கள். தன்னம்பிக்கை காரணமாக, முடிக்கப்படாமல் இருந்த பணிகள் முடிக்கப்படும். உங்களது விதி அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அறிவார்ந்த விஷயங்கள் மீது ஆர்வம் செலுத்தவும். பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.