ETV Bharat / spiritual

இன்று குதூகலம் நிறைந்த நாளாக இருக்கப்போகுது.. யாருடைய ராசிக்கு தெரியுமா?

ஜனவரி 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : January 11, 2026 at 7:10 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மேஷம்: மனதிற்குப் பிடித்தவர்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்வீர்கள். அவர்களின் மனதை கவர புதுமையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது அதிருப்தி இருக்கக்கூடும். எனினும், இன்று மாலையில் புதிய நண்பர்களுடன் விருந்துக்கு செல்வீர்கள்.

ரிஷபம்: இன்று உணர்வு ரீதியாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உணர்ச்சி போராட்டம் காரணமாக உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் சந்திப்பின்போது, மற்றவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக குழப்பமான நிலை நிலவக் கூடும். விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

மிதுனம்: உங்களை சுற்றி இருக்கும் நபர்களிடம், நீங்கள் ஆராய்ந்த விஷயங்களை எடுத்துக் கூறுவீர்கள். அவர்களும் உங்களது உணர்வுகள் மற்றும் எண்ணங்களைப் புரிந்து கொள்வார்கள். உங்களது எண்ணங்கள் ஈடேற அவர்கள் உதவுவார்கள். பொதுவாக, இன்று வேடிக்கை மற்றும் குதூகலம் நிறைந்த நாளாக இருக்கும்.

கடகம்: பணியிடத்தில் உங்களது திறமையின் காரணமாக, முக்கிய திட்டங்களில் வெற்றி பெறுவீர்கள். ஆனால், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், கவனமாக செயல்படுவது முக்கியம்.

சிம்மம்: பழைய நட்புகளை புதுப்பிப்பதற்கும், புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இது சிறந்த நாள். நண்பர்களும், உறவினர்களும் உங்கள் வீட்டிற்கு வருகை தருவார்கள். வீட்டில் குதூகலமான சூழ்நிலை நிலவும். விருந்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் சிறந்த வகையில் விருந்தளிப்பீர்கள்.

கன்னி: வர்த்தகம் - சந்தோஷம் ஆகிய இரண்டும் இன்று கைகூடும். சமூகக் கூட்டங்களால் நன்மை கிடைக்கும். நீங்கள் எந்த அளவிற்கு நேரத்தை செலவிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு பணம் செலவாகும். ஆகையால், சிந்தித்து செலவு செய்வது நல்லது.

துலாம்: இன்று அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது உங்களது பணியில் உள்ள ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்: உறவுகள் வாழ்க்கையின் வேர்கள் என்பதால், உங்களை சுற்றியுள்ளவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும். அவர்களது முக்கியத்துவத்தை உணரச் செய்யவும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடாது.

தனுசு: கிரக நிலைகள் சாதகமாக இருப்பதால், இன்று சிறந்த நாளாக இருக்கும். உங்களது செயல்திறன் காரணமாக பாராட்டை பெறுவீர்கள். பணியில் எந்த விதமான பிரச்சனை வந்தாலும் எளிதாக சமாளிப்பீர்கள். உங்களது அணுகுமுறையின் மூலம் அனைவரது மனங்களையும் வெல்வீர்கள்.

மகரம்: பணியிடத்தில் அங்கீகாரமும், பாராட்டும் காத்திருக்கின்றன. சக பணியாளர்கள் உங்கள் வெற்றியை பார்த்து பொறாமைப்படாமல், உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளை திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.

கும்பம்: இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. வீட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் சிரமம் ஏற்படும். குழந்தைகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள், நிலைமையை மேலும் மோசமாக்கும். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பெரிதாக்க முயற்சி செய்வார்கள்.

மீனம்: தினசரி பணியை ஒழுங்குபடுத்த அதிக முயற்சி செய்வீர்கள். ஆனால் கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால், உங்களது முயற்சிகள் வெற்றி அடையாமல் இருக்கும். எனவே, பொறுமையை கடைபிடித்தால் நிலைமை தானாகவே சரியாகும்.