ETV Bharat / spiritual

இன்றைய ராசிபலன்; வேலை அல்லது சம்பள உயர்வு காத்திருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்

ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 30, 2026 at 7:12 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மேஷம்: திட்டமிடல், கூட்டங்கள் என இன்று நாள் முழுக்க நீங்கள் செய்யவேண்டிய வேலைப்பட்டியல் நீண்டிருக்கும். மற்றவர்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்காததால் சோர்வும், மன உளைச்சலும் ஏற்படலாம். எனினும், விஷயங்கள் முடிவுக்கு வரும்போது, அவை தெளிவாகும்.

ரிஷபம்: இன்றைய தினம் நீங்கள் செய்யும் விஷயங்களை சிறப்பாக செய்வீர்கள். உங்களுக்கு வழங்கப்படும் பொறுப்புகளை திறமையுடன் கையாண்டு, நல்ல பேர் வாங்குவீர்கள்.

மிதுனம்: மற்றவர்களின் செயல்களை பற்றி கவலைப்படாமல், சொந்தக் காலில் நிற்பதில் கவனம் செலுத்துவதும், சமூகத்தில் நிலைத்து நிற்பதும் அவசியம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். சில்லறை வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு லாபத்தையும், விறுவிறுப்பான வர்த்தகத்தையும் பார்ப்பார்கள்.

கடகம்: கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். இல்லையெனில், அது உங்கள் அருகில் இருப்பவர்களை காயப்படுத்தும். எழுத்தாளர்கள், உயர்தரமான படைப்பை படைக்கலாம். இன்று கலைஞர்களுக்கு உகந்த நாள்.

சிம்மம்: இன்றைய தினம் கடினமாக உழைப்பீர்கள். வெற்றிபெற வேண்டும் என விரும்பினால். கடின உழைப்புக்கு மாற்று இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், விரைவில் இதை நீங்கள் உணரவும் கூடும். எனவே இன்று வியர்வை சிந்துவதில் தவறேதும் இல்லை. மேலும், கடின உழைப்பு எப்போதும் வட்டியுடன் சேர்த்து பலனளிக்கும்.

கன்னி: காதல் துணை உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுப்பதோடு, ஒரு கோரிக்கையையும் முன்வைப்பார். தொழிலில் நல்ல செய்திகள் வருவதற்கான வாய்ப்புண்டு. நீங்கள் செய்த பழைய தவறுகளை பகுத்தாய்வு செய்வதன் மூலம், அவற்றை மீண்டும் செய்யாமல் தவிர்க்கலாம். எதிர்காலத்திற்கான திட்டங்களைத் திட்டவும்.

துலாம்: உங்கள் உயர்வான குணம் மற்றும் இளகிய மனதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள பலர் முயற்சிப்பார்கள். சிறிய பிரச்சினைகள் பெரிதாக வளர்ந்து, உங்கள் இயல்பை மாற்றி, கோபத்தை அதிகரிக்கச் செய்யும். பண விவகாரங்களில் அதிக ரிஸ்க் எடுக்க உங்களுக்கு ஊக்கம் கிடைக்கும்.

விருச்சிகம்: நீண்ட கால முதலீடுகளிலும், ரியல் எஸ்டேட்களிலும் முதலீடு செய்ய நல்ல நாள் இன்று. இது நீண்டகால நன்மைகளையும், லாபங்களையும் கொடுக்கும். உட்கார்ந்து ஓய்வெடுக்கவும், வாழ்க்கையில் இதுவரை தவறவிட்ட மகிழ்ச்சியை அனுபவிக்க ஏற்ற நேரம் இது.

தனுசு: மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கைமுறையின் பாதகமான விளைவுகளை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள். இருப்பினும், ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்டுவிட்டதால் நிலைமை மாறும் வாய்ப்புகள் தென்படுகிறது. மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்கவும். நல்ல செய்தி அல்லது வேலை உயர்வுடன் சம்பள உயர்வு போன்றவற்றுடன் இந்த மாற்றம் தொடங்கும்.

மகரம்: உணர்வுபூர்வமான உணர்வை வெளிப்படுத்த வேண்டாம். அவை உங்கள் கணிப்பை மேகம் போல் மறைத்து, உங்கள் வெற்றிக்கு தடையாக மாறிவிடும் வாய்ப்புகள் தென்படுகின்றன. உங்கள் இயல்பான நடவடிக்கையும், நல்ல அணுகுமுறையும் பலரின் இதயங்களை வெல்வதற்கான வாய்ப்புகளை கொடுக்கும்.

கும்பம்: ஏதேனும் இலக்கை அமைத்து, அதை அடைவதற்காக செயல்படவும் அல்லது ஏதாவது சவால் ஒன்றை ஏற்றுக்கொள்ளவும். அவற்றில் ஏதாவது ஒன்றில் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய கடின உழைப்பு மற்றும் சாதனைகளைப் பற்றி பிறர் பாராட்டுவார்கள்.

மீனம்: இதயத்திற்கு நெருக்கமாக இருப்பவர்களிடம் மிகவும் நெகிழ்வுடனும், உணர்வுப்பூர்வமாகவும் இருப்பீர்கள். உங்களை நன்கு அறிந்தவர்களுக்கும் இது பிடிக்கும் என்றாலும், மனதிற்கு நெருக்கமானவர்களை சற்று கண்காணிப்பது நல்லது. ஏனெனில், அவர்களின் அன்பு உங்கள் கண்களை மறைத்து, தவறுகளை மட்டுப்படுத்திக் காண்பிக்கும் அல்லது நீங்கள் அவற்றை மன்னித்து மறந்துவிடுவீர்கள்.