ETV Bharat / spiritual

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு மழை: உங்க ராசிக்கு என்ன ஸ்பெஷல்?

ஏப்ரல் 6ஆம் தேதி திங்களன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : April 6, 2026 at 7:09 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மேஷம்: உங்களது வாழ்க்கையில் நீங்களே உற்சாகத்தை ஏற்படுத்திக் கொள்ளவும். ஏதேனும் புதிய இடங்களுக்கு சென்று வாருங்கள். ஏதேனும் ஒரு பணியில் மனம் லயித்து வேலை செய்யவும். அதற்காக அளவுக்கு அதிகமான வகையில் வேலை செய்யக் கூடாது. குழு நடவடிக்கைகளில் அனைவரது கவனமும் உங்கள் பக்கம் இருக்கும்.

ரிஷபம்: இன்று, உங்களது கவனம் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது இருக்கும். அவர்களுடனான உங்கள் ஆத்மார்த்தமான உறவுகள் மூலம் மனதை மகிழ்ச்சியாக இருக்கும். இன்று முழுவதும் அவர்களது எண்ணங்களே உங்கள் மனதில் நிறைந்திருக்கும்.

மிதுனம்: இன்றைய தினத்தில், மேலதிகாரிகள் உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்குவார்கள். பகல் நேரத்தில் வேலை அதிகம் இருந்தாலும், மாலையில், இன்றைய உங்களது திறமையான பணியின் காரணமாக பெற்ற வெற்றியை கொண்டாடும் வாய்ப்பு உள்ளது. ஏலம் தொடர்பான விஷயங்களில் தற்போது முடிவெடுக்காமல் சிறிது ஒத்திப் போடுவது நல்லது.

கடகம்: இன்றைய தினத்தில் நீங்கள் வேடிக்கையான மனநிலையில் இருப்பீர்கள். வேடிக்கை, வம்பு பேச்சுக்கள், சிரிப்பு மற்றும் குதூகலம் நிறைந்து, இன்றைய தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நாளின் பிற்பகுதியில், நீங்கள் உங்கள், வழக்கமான அமைதியான நிலைக்கு திரும்பி, பணியில் கவனம் செலுத்தி, வேலையை நிறைவு செய்வீர்கள்.

சிம்மம்: அலுவலகத்தில் பதவி உயர்வை அடைய, உங்கள் வேலையின் மீதும், வேலைகளை செயல்படுத்தும் உத்தியின் மீதும், நீங்கள் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். கூடுதல் வேலைகளையும் நீங்கள் மேற்கொள்வீர்கள். இதற்கான பலன்கள் உடனடியாக கிடைக்காவிட்டாலும், வருங்காலத்தில் இதற்கான பலன்களை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். உங்கள் தனிப்பட்ட உறவுகளைப் பொறுத்தவரை, குறிப்பிட்டு சொல்லும்படியான விஷயங்கள் எதுவும் நடைபெறும் வாய்ப்பு இல்லை.

கன்னி: உங்களது குறிக்கோள்கள் மற்றும் அதிக அளவிலான வேலைகளை எடுத்துக் கொள்வதற்கான உங்களது ஆர்வம் ஆகியவை இன்று அதிகம் இருக்கும். இன்றைய கடும் உழைப்பிற்குப் பிறகு, புத்துணர்ச்சி பெற, தனிப்பட்ட விருந்து, சமூக நிகழ்ச்சிகள் அல்லது திருமண விருந்து ஆகியவற்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருக்கலாம்.

துலாம்: இன்றைய தினத்தை பொருத்தவரை, மக்கள் கூறும் அனைத்தையும் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அதைப் பற்றி எதுவும் குறை கூற மாட்டீர்கள். உங்கள் சுற்றி நடக்கும் விஷயங்களை பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். உங்களது நீக்குப் போக்காக அணுகுமுறையின் மூலம், உங்களது கருத்துக்களை நியாயப்படுத்தி எடுத்துக்கூற முடியும்.

விருச்சிகம்: உணர்வுகளை வெளிப்படுத்துவது, மிகவும் முக்கியமாகும். உங்களுக்கு நெருக்கமானவர்களுடன், உங்கள் மனதில் இருப்பவற்றை பகிர்ந்து கொள்வீர்கள். இது ஒரு வரவேற்கத்தக்க தன்மையாகும். உங்கள் இதயத்தில் உணர்ச்சிகள் அதிகம் இருந்தாலும், பொது இடத்தில் பலர் பார்க்கும் வண்ணம் உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் வெளிப்படுத்தக் கூடாது.

தனுசு: இன்று உங்கள் மேலதிகாரிகள், உங்கள் மீது நம்பிக்கை வைத்து பல கூடுதல் பொறுப்புகளை வழங்குவார்கள். நீங்களும் அதற்காக கடுமையாக உழைத்து, உங்கள் திறமையை நிரூபிப்பீர்கள். உங்களது உழைப்பு பாராட்டைப் பெறும். ஊக்கத்தொகை கிடைத்தால் ஆச்சரியப்பட வேண்டாம். நீங்கள் அதற்கு தகுதியானவர் தான்.

மகரம்: நல்ல நாளின் தொடக்கம் சிறந்த வகையில் இருக்கும். வாழ்க்கையில் நேர்மறையான அணுகுமுறையுடன் இன்றைய தினத்தை நீங்கள் தொடங்குவதால், இது ஒரு சிறந்த நாளாக இருக்கும். உங்களது அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான மனப்பான்மை, மற்றவர்களிடமிருந்து உங்களை உயர்வாக காட்டுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் வாழ்க்கைத் துணையுடன், சச்சரவு ஏதேனும் ஏற்பட்டிருந்தால், இன்று அந்த மனக்கசப்பு நீங்கும் வாய்ப்பு உள்ளது. இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, மணவாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக இருக்கும்.

கும்பம்: நிதி நிலைமை மற்றும் வருமானம் தொடர்பான எண்ணங்கள் அல்லது கவலைகள், உங்கள் மனதில் இன்று முழுவதும் இருக்கும். மாலையில் நீங்கள் நண்பர்களுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிக்கும் வாய்ப்பு உள்ளது. நண்பர்களை, நீங்கள் ஒதுக்கியதில்லை என்றாலும், இன்று நண்பர்களின் முக்கியத்துவத்தை நீங்கள் முற்றிலுமான உணரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

மீனம்: உங்களது மனதில் உள்ளவற்றை, உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவீர்கள். உங்களது சிறந்த தொடர்பு திறன் காரணமாக, அறிவார்ந்த மக்கள் உங்கள் மீது ஈர்ப்பு கொள்வார்கள். சிறந்த கல்வியாளர்கள் மற்றும் முன்னேற்றமடைந்த மக்களுடன் பணியாற்றும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இது பணியில் நீங்கள் உயர்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.