ETV Bharat / spiritual

இந்த ராசிக்காரர்களுக்கு காதல் வாழ்க்கையில் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன - உங்க ராசிக்கு எப்படி?

டிசம்பர் 13 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : December 13, 2025 at 7:01 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மேஷம்: இன்று தனிமையில் இருக்க விரும்புவீர்கள். பணியில் உங்கள் மூத்தவர்களுடன் அறிவுத்திறனை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் செலவுகளை கட்டுப்படுத்தும் தேவையும் உள்ளது.

ரிஷபம்: இன்று உங்களுக்கு படைப்பாற்றல் திறன் அதிகம் இருக்கும். பணியில் புதுமைகளை புகுத்தி அதனை செயல்படுத்துவதில் ஆர்வம் இருக்கும். உங்களது மென்மையான பேச்சின் மூலம் பலரின் மனதை கவர்வீர்கள்.

மிதுனம்: வீட்டில் குதூகலமும், மகிழ்ச்சியும் நிலவும். வீட்டின் அலங்காரத்தை மேம்படுத்துவதற்கான விஷயங்களில் அதிக ஈடுபாடு கொண்டு, குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பீர்கள். நெடுநாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

கடகம்: இன்று காதல் துணையுடன் வெளியில் சென்று அவர்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்க பணம் செலவழிப்பீர்கள். உங்களது முயற்சியை கண்டு மகிழும் உங்கள் காதல் துணையும், அதைவிட பத்து மடங்கு அதிகமாக உங்களுக்கு பரிசையும், அன்பையும் வழங்குவார்.

சிம்மம்: வாழ்க்கையில் எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை. கடின உழைப்பு தேவைப்படாத விஷயங்களிலும் நீங்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். அதனால் வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று மிகவும் அனுகூலமான நாளாக இருக்கும்.

கன்னி: சுற்றியுள்ளவர்கள் உங்களை பார்த்து ஊக்கம் பெறுவார்கள். அறிவாற்றலும், அனைவரையும் அனுசரித்து செயல்படும் திறனும் அனைவரையும் கவரும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இன்று குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பீர்கள்.

துலாம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளல்ல. சிறிது மன அழுத்தங்கள் இருந்தாலும் மாலையில் மகிழ்ச்சியாக இருப்பது உறுதி. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

விருச்சிகம்: வாழ்க்கை ஒரு சிறந்த ஆசிரியர் என்பதை இன்று அனுபவத்தால் அறிவீர்கள். கடும் போட்டியின் மத்தியில் வெற்றி பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். இதனால் எதிர்ப்புகள் வந்தாலும் அது உங்களை பாதிக்காது. தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது இறைவன் இயல்பு என்பதை நினைவில் கொள்ளவும்.

தனுசு: உங்கள் குடும்பத்தினருக்கும், மனதுக்கு பிடித்தவர்களுக்கும் இன்று முன்னுரிமை கொடுப்பீர்கள். வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு அவர்களுடன் நேரம் செலவழிக்க விரும்புவீர்கள். மாலையில் நண்பர்கள் வருகையினால் குதூகலம் அதிகரிக்கும்.

மகரம்: இன்று உங்களுக்குப் பொருத்தமான துணையை கண்டறிந்து அவர்களிடம் உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். உங்கள் உணர்வுகளை இன்று அதிகம் வெளிப்படுத்துவீர்கள். நீங்கள் வெளிப்படுத்தும் நிபந்தனையற்ற அன்பு பல மடங்கு உங்களை வந்து சேரும்.

கும்பம்: இன்றைய தினம் உங்களுக்காக நேரம் செலவிட விரும்புவீர்கள். ஆனாலும் தேவையான அமைதியும், நிம்மதியும் இன்று கிடைக்காது. விருப்பமில்லாத நிகழ்வுகளின் காரணமாக மன வருத்தம் ஏற்படும்.

மீனம்: இன்று வீழ்த்த இயலாத நபராக இருப்பீர்கள். பலவகையான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன் பெற்றிருப்பீர்கள். உங்களது செயல்திறனை பார்த்து மற்றவர்கள் பாராட்டுவார்கள். பெண்களை பொறுத்தவரை இன்று லாபகரமான நாளாக இருக்கும்.