இவர்கள் தான் இன்று புத்துணர்ச்சியுடன் செயல்படும் ராசிகாரர்கள்!
செப்டம்பர் 1ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

Published : September 1, 2026 at 7:30 AM IST
மேஷம்: உங்களுடைய உற்சாகத்தை நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தொடர்ந்து திட்டமிட்டுக்கொண்டே இருக்காமல் செயலில் இறங்கவும். நாளில் பிற்பகுதியில் கொண்டாட்டங்கள் காத்திருக்கின்றன.
ரிஷபம்: சக்தி, களிப்பு, உற்சாகம் ஆகிய மூன்று உணர்ச்சிகள் இன்று மனதில் இருக்கும். இதனால் அருகிலிருப்பவர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். களைப்பாக உணர்ந்தால் வேலையிலிருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொள்ளவும்.
மிதுனம்: காதல் வாழ்க்கை சில ஏற்ற இறக்கங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. பண விவகாரத்தில் துணிந்து செயல்பட நேரிடும். நிறைய யோசிக்காமல் நம்பிக்கையை காத்து, மன மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ளவும்.
கடகம்: இன்று புதிய பொறுப்புகள் வரும். இதில் மூழ்குவதால் நீங்கள் இன்று சோர்வாக இருப்பதை உணர்வீர்கள். இதில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம் மன அழுத்தத்தை உணர்வீர்கள்.
சிம்மம்: இன்று, புதிதாக எதையாவது முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களிடம் இருக்கும். இன்று முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். உங்களது ஆற்றல் மற்றும் ஆர்வத்தின் காரணமாக, வெற்றி கிட்டும். கிரகங்கள் சாதகமாக இருக்கின்றன; அதனால், உங்களுக்கு ஏற்படும் சவால்களை ஏற்றுக்கொண்டு, அதனை நிறைவேற்ற முயற்சி செய்யலாம்.
கன்னி: இன்று, செலவுகள் கட்டுப்படுத்த முடியாத வகையில் அதிகரிக்கக்கூடும். அதிக பண விரயம் ஏற்படலாம். எனினும், விஷயங்கள் சாதகமாக நடக்கும் வாய்ப்பு உள்ளது. அதனை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தனிப்பட்ட விஷயங்கள் மற்றும் தொழில் ரீதியாகவும் மேம்படுவீர்கள்.
துலாம்: உங்களது ஆளுமைப் பண்பை மேம்படுத்திக்கொண்டு, பணியில் உங்கள் திறமையை நிரூபிப்பதற்கான சரியான நேரம் இதுவாகும். இன்று, நீங்கள் புதிய ஆடைகளை வாங்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்கள் மீது நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இன்று நீங்கள், உங்கள் கனவு உலகில் நேரத்தை செலவிடுவீர்கள்.
விருச்சிகம்: பிரச்சினைகளை சரிசெய்வதில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். வேலையின் மீது மிகுந்த விருப்பம் ஏற்படும். நாளின் பிற்பகுதியில், நிலுவையிலுள்ள பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு எட்டப்படும்.
தனுசு: இன்று நீங்கள் முழுமையான மன எழுச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் விரும்பும் ஒன்றை அடைவீர்கள். ஏதேனும் நிகழ்ச்சிகளில் மைய நாயகனாக உங்களை ஆக்கினால் ஆச்சரியப்படாதீர்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, பயணத்துக்கான ஆயத்தங்களை செய்து தயாராக இருங்கள். உங்கள் நட்சத்திரப்படி, நீங்கள் வியாபார நிமித்தம் வெகுதூரம் பயணம் செய்ய நேரிடலாம்.
மகரம்: நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகள் மற்றும் திட்டங்கள் அதிகம் இருக்கும். வேலைகளை எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக நிறைவு செய்து, புத்துணர்ச்சி பெற அமைதியாக சிறிது நேரம் ஓய்வெடுக்கவும். பலதரப்பட்ட மக்களுடன் தொடர்பு கொள்வது உங்களது அறிவை விரிவாக்கும். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சுதந்திரமாக செயல்படுவீர்கள்.
கும்பம்: விஷயங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் இருந்தாலும், நீங்கள் சோர்வடையாமல் நம்பிக்கையுடன் இருப்பீர்கள். நிதானமாக முன்னேறுவது வெற்றியைத் தரும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை அதிகம் இருக்கும். உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேறும் திறன் உங்களுக்கு உள்ளது. நிதி நிலைமை நல்ல நிலையில் தான் இருக்கும்.
மீனம்: நெருக்கமானவர்கள் மற்றும் விருப்பமானவர்களுக்காக நீங்கள் பணிந்து நடந்து கொள்வீர்கள். முக்கியமான முடிவுகளை சில நாட்களுக்குத் தள்ளிப்போடுவது நல்லது.

