ETV Bharat / spiritual

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று அற்புதமான நாள் - உங்க ராசிக்கு எப்படி?

மே 5-ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 5, 2026 at 7:01 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மேஷம்: இன்று உங்களுக்கு ஆன்மிக உணர்வு ஏற்படும். இதன் காரணமாக, அண்டை வீட்டினருடனான உறவில் ஏற்பட்ட விரிசல் உட்பட கடந்த கால நிகழ்வுகளுக்கு பொறுப்பேற்று கொள்வீர்கள். இதுவே வருங்காலத்தில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான அஸ்திவாரமாக இருக்கும்.

ரிஷபம்: இன்றைய நாள் சாதாரணமாக தொடங்கி, குதூகலத்துடன் முடிவடையும். மதிய நேரத்தில் மன அழுத்தமும் பதற்றமும் உண்டாகலாம். எனினும் மாலை நேரத்தில், உங்களுக்கு அன்பானவர்கள் மற்றும் மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரத்தை கழிப்பீர்கள்.

மிதுனம்: இன்று நீங்கள் உணவு பழக்கவழக்கத்தின் மீது அதிக கவனம் செலுத்தக்கூடும். அலுவலகத்தில் மூத்தவர்களிடம் இருந்து உதவியும் ஊக்கமும் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

கடகம்: இன்றைய நாளின் முதல் பகுதியில் பதற்றமான மனநிலை இருக்கும். பணியிடத்திலும் மிகவும் பதற்றமடைந்து கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். ஆனால் அலுவலகத்தில் நிதானத்தை இழக்க வேண்டாம். இல்லாவிட்டால் இதன் பாதிப்புகள் மிகவும் மோசமாக இருக்கும்.

சிம்மம்: கலைத்திறன் மூலம் செயல்திறனை வெளிப்படுத்துவீர்கள். இன்று உற்சாகமாக பணியில் ஈடுபடுவீர்கள். நீங்கள் செய்யும் பணிகளை திறம்பட செய்து முடித்துவிட்டால், உங்களை விமர்சிப்பவர்களின் வாயை எளிதாக அடைத்து விடலாம்.

கன்னி: இன்றைய நாள் சோர்வாக தொடங்கினாலும், உற்சாகமாக முடிவடையும். மாலையில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், மனநிம்மதியுடன் இருப்பீர்கள். இந்த நாளை முடிவில் மன அழுத்தங்கள் நீங்கி, மனதிற்கு பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை கழிப்பீர்கள்.

துலாம்: முக்கியத்துவம் இல்லாத விஷயங்கள் குறித்து இன்று கவலை கொள்வீர்கள். மற்றவர்களுடன் கலந்தாலோசித்து செயல்பட்டால் சுமுகமாக முடியும். வர்த்தகத் துறையை பொருத்தவரை, பல்வேறு வழிகளில் இந்த பணம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்: ஒரு அற்புதமான நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. போட்டி அதிகம் இருக்கும் என்றாலும் அதனை சமாளிப்பீர்கள். மாலையில் உங்களை அலங்கரித்துக் கொண்டு சமூக நிகழ்ச்சியில் கலந்துகொள்வீர்கள். அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

தனுசு: உங்கள் புன்னகையின் மூலம் அனைவரின் மனதையும் கவருவீர்கள். உங்கள் அறிவார்ந்த ஆலோசனைகளின் மூலம் உடன் பணி புரிபவர்கள் பலனடைவார்கள். மாலை நேரத்தில், உங்கள் காதல் துணையுடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பு உள்ளதால், மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

மகரம்: அலுவலகத்தில் பலவிதமான கேள்விகளுக்கான பதிலை தேடுவதில் பெரும்பாலான நேரம் செலவழியும். புதிய வர்த்தக திட்டம் அல்லது முயற்சியை மேற்கொள்ள போதுமான அளவு நிதி உதவி கிடைக்கும். தற்போது உள்ள வர்த்தகமும் நீங்கள் எதிர்பார்த்ததைவிட மேம்படும்.

கும்பம்: இன்றைய தினத்தில் பணி அற்புதமாக இருக்கும். ஆனால் பலன்கள் கிடைக்காது. பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது. குழந்தைகள் அல்லது உங்களது வாழ்க்கைத்துணை இன்று மாலை உங்களிடம் கோபம் கொள்ளலாம். ஆனால் நீங்கள் அதைப்பற்றி கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கவும்.

மீனம்: பழைய நண்பர்கள் அல்லது பழைய காதலரை இன்று சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் செயல்படுவீர்கள். இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ளவும்.