ETV Bharat / spiritual

குழந்தை பருவத்திற்கு மாறவிரும்பும் ராசிக்காரர்; நட்புகள் சூழ வெற்றி காண்பாரா?

மே 2 ஆம் தேதி சனிக்கிழமையான இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 2, 2026 at 7:06 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மேஷம்: உங்கள் மனதிற்கு பிடித்தவரை மகிழ்ச்சியாய் வைத்திருக்க முயற்சி மேற்கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீது, ஏதேனும் ஒரு காரணத்திற்காக வருத்தம் இருக்கலாம். எனினும் இன்று இரவில் நடக்கும் சந்திப்பில், புதிய நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

ரிஷபம்: இன்று உங்களுக்கு அதிர்ச்சிகள் காத்திருக்கக் கூடும். நாள் முழுவதும் பிரச்சினை ஏற்பட்டாலும், பொறுமையாக செயல்பட்டு நீங்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து விடுவீர்கள்.

மிதுனம்: இன்று உங்கள் மனதுக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். உதவி தேடுபவர்களுக்கு உதவும் வகையில் நீங்கள் தாராள மனப்பான்மையை கொண்டிருப்பீர்கள். உங்களது நற்சிந்தனை காரணமாக, சமூக அந்தஸ்தும் மதிப்பும் உயரும்.

கடகம்: இன்றைய தினம் உங்களுக்கு மனக்கவலை ஏற்பட்டாலும், உங்கள் செயல் திறனின் மூலமாக அனைத்தையும் வெற்றி கொள்வீர்கள். படிப்பில் கவனம் செலுத்தவும். வெற்றி என்பது 99 சதவீத முயற்சி என்பதை நினைவில் கொள்ளவும்.

சிம்மம்: உங்கள் சக பணியாளர்கள் உடனான உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும். புதிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள இது சிறந்த நாளாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வரக்கூடும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். விருந்தினர்களுக்காக நீங்கள் சிறந்த விருந்து கொடுக்கக்கூடும்.

கன்னி: வர்த்தகம், பொழுதுபோக்கு ஆகிய இரண்டிற்கும் நீங்கள் சமமான முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விருந்து ஒன்றில் கலந்துகொண்டு நீங்கள் மகிழக்கூடும். விருந்துகளில் அதிகம் கலந்து கொள்வீர்கள். நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவிற்கு செலவு இருக்கும். எனினும், நீங்கள் செலவு செய்யும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

துலாம்: இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது பணியில் உள்ள ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

விருச்சிகம்: உறவுகள், வாழ்க்கையின் வேர்களாகும். உங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் உங்களைச் சுற்றி உள்ளவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும். அவர்களது முக்கியத்துவத்தை உணரச் செய்யவும். கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதைத் தீர்க்கவும். நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது.

தனுசு: பிரச்சினைகள் இல்லாத குழந்தைப் பருவத்திற்கு செல்ல நீங்கள் விரும்புவீர்கள். திட்டமிடப்படாத சுற்றுலா பயணம் போன்றவற்றை மேற்கொள்ள நீங்கள் விரும்பலாம். பழைய நண்பர்களை சந்திப்பதன் மூலம், மலரும் நினைவுகள் மூலம், மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

மகரம்: இன்று, பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சக பணியாளர்கள் உங்கள் வெற்றியை பார்த்து பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளில் வரும் சாதனைகளில் திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.

கும்பம்: வலியைக் கொடுக்கும் உங்கள் கடவுள், சுகத்தையும் வழங்குவார். இன்றைய நாளின் தொடக்கத்தில், செய்யவேண்டிய பணி அதிகம் இருந்தாலும், இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து முடித்து விடுவீர்கள். அதனால் நீங்கள் சோர்வாக உணரக்கூடும். குளிர்ந்த நீரில் குளித்து விட்டு அமைதியாக ஓய்வு எடுக்கவும்.

மீனம்: நீங்கள் மோசமான குணமும் பொறாமை குணமும் கொண்டவரல்ல. ஆனால், இது போன்ற தன்மை ஏற்படாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒருவர் உங்கள் புகழையும் மதிப்பையும் கெடுக்கும் எண்ணத்தில் செயல்படலாம். எனினும் கோபப்படாமல், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி நிதானமாக உங்கள் அன்றாட பணியை கவனிக்கவும்.