ETV Bharat / spiritual

இன்று கனவுகள் நிறைவேறும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

மார்ச் 4ஆம் தேதி புதன்கிழமையான இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 4, 2026 at 6:56 AM IST

1 Min Read
Choose ETV Bharat

மேஷம்: இன்று நீங்கள் பலவிதமான விஷயங்கள் மீது ஈர்ப்பு கொள்வீர்கள். ஆனால் மின்னுவது அனைத்தும் பொன்னல்ல என்பதை நினைவில் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளுக்காக நேரம் செலவிடுவது அவசியம்.

ரிஷபம்: இன்று, சிந்தனை மிகுந்த, ஆதாயமான நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி விஷயங்கள் நடக்கவில்லை என்றால், ஏமாற்றம் கொள்ளவேண்டாம். இதனால் மோசமான விளைவுகள் எதுவும் ஏற்படாது.

மிதுனம்: தினசரி பணியிலிருந்து சிறிது விலகி, ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புவீர்கள். அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்வதால் மன அழுத்தம் ஏற்படலாம். வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குடும்பத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்.

கடகம்: புகழ் பெறவேண்டும் என்ற உங்கள் கனவு நிறைவேறும். சரியான திட்டமிடல் மூலம் நீங்கள் பணிகளை நிறைவு செய்வீர்கள். உங்கள் முயற்சி அனைத்தும் வெற்றி பெறும்.

சிம்மம்: சந்தோஷமான மனநிலையில் இருப்பீர்கள். அனைத்து பணிகளையும் உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். காலையில் மனதில் பட்டதை செய்வீர்கள். மாலையில் சிறிது சிந்தித்து செயல்படுவீர்கள்.

கன்னி: பெண்கள் தங்கள் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களை அழைத்து, விருந்து கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் காதல் துணையின் நினைவில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துலாம்: இன்று அதிக வேலைப்பளு காரணமாக, குடும்ப உறுப்பினர்கள் மீது கவனம் செலுத்தமுடியாமல் போகலாம். விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். இன்றைய தினத்தைப் பொருத்தவரை, குறைந்தபட்ச முயற்சியில் அதிக பலன் கிடைக்கும்.

விருச்சிகம்: எதை பற்றியும் சிந்திக்காமல் கண்ணால் பார்ப்பதை மட்டுமே நம்பவும். இதன்மூலம் குழப்பங்களையும் சச்சரவுகளையும் தவிர்க்கலாம். முக்கியமான விஷயங்களை கவனிக்க தவறாதீர்கள்.

தனுசு: அனைத்து வர்த்தகர்களுக்கும் இன்று லாபகரமான நாளாக இருக்கும். உங்கள் கனவுகள் நிறைவேறும். கடன் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளப்படும். மனதிற்குப் பிடித்தவர் சந்தோஷப்படும் வகையில் செயல்படுவீர்கள்.

மகரம்: இன்று அதிக வேலைப்பளுவால் சோர்வாக உணர்வீர்கள். தியானத்தின் மூலம் கூட மன அழுத்தத்தை நீக்க முடியாமல் இருக்கும். கார் அல்லது வீடு வாங்க இது சாதகமான நாளாக இருக்கும். புதிய வீட்டிற்கு செல்லும் வாய்ப்பும் அதிகம் உள்ளது.

கும்பம்: இன்று எதிர்பாராத ஒரு நாளாக இருக்கும். போட்டியாளர்களால் உங்களது நடவடிக்கைகளை கணிக்க முடியாது. உங்களது நேர்மையான முயற்சிகள் பாராட்டப்பட்டு பலன்கள் கிடைக்கும். பணிகளை முடித்து விட்டதால் சிறிது ஓய்வு எடுத்து அடுத்த நாளுக்கு தயாராகவும்.

மீனம்: நாளின் முதல் பாதியில், சமூக ரீதியான பொறுப்புகளில் அதிகம் நேரம் செலவிடுவீர்கள். மதிய நேரத்தில் உதவிக்காக சிலரை அழைக்கக்கூடும். உங்களது அன்பான நடவடிக்கைகள் மூலம் மற்றவர்களின் மனதில் இடம் பிடிப்பீர்கள். இன்று ஆச்சரியங்கள் நிறைந்த மறக்க முடியாத நாளாக இருக்கும்.