ETV Bharat / spiritual

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொண்டாட்டமான நாள்: உங்க ராசிக்கு எப்படி?

ஜூன் 3ஆம் தேதி புதன்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : June 3, 2026 at 7:09 AM IST

2 Min Read
Choose ETV Bharat

மேஷம்: இன்றைய தினத்தில், உங்களை நீங்களே பாராட்டிக் கொண்டு, சிறந்த வகையில் ஆடைகளை அணிந்து கொள்வீர்கள். மற்றவர்களும் உங்களை, கவனித்துப் பார்த்தால், நீங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி வெற்றியடைந்து அனைவரையும் கவர்கிறோம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால், நீங்கள் மேலும் உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்: ஒரு மேலாளராக, நீங்கள் நிறுவனத்திற்கு சிறந்த வகையில் லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்து, உங்கள் சக ஊழியர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். அணுகுமுறையை மாற்றிக் கொண்டு, அலுவலகத்தில் அனைவரையும் கருத்துக்களையும் கேட்டறிந்து, அவர்கள் கூறும் கருத்துகளுக்கு ஏற்ப முடிவெடுத்து செயல்படுவீர்கள். இதன் மூலம் வெற்றி வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இக்கட்டான கால நிலைகளில் சமாளிக்கும் நிலையும் ஏற்படும்.

மிதுனம்: இன்று மிகவும் ஆக்கப்பூர்வமான, திருப்திகரமான நாளாக இருக்கும். உங்களது தினசரி பணிகளுடன் கூடவே, வீட்டு பணிகளிலும் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். வாகனம் வாங்கும் எண்ணம் இருக்கும். திருமணம், கூட்டாளித்துவம் போன்ற விஷயங்களில் உங்களுக்கு இரட்டை மனநிலை இருக்கும். ஏதேனும் விற்க வேண்டும் என்றால் அதற்கு இன்று உகந்த நாளாக இருக்கும்.

கடகம்: இன்று நீங்கள் பல வகையான பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்வீர்கள். அவற்றை வேகமாகவும், உற்சாகத்துடனும் மேற்கொண்டு, பணிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். மிகவும் கடினமான பணிகளை கூட கண்ணிமைக்கும் நேரத்தில் செய்து முடித்து விடுவீர்கள்.

சிம்மம்: இன்று குதூகலமான நாளாக இருக்கும். நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உற்சாகத்துடன் செய்வீர்கள். அலுவலகத்தில், பணியில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் உழைப்பிற்கான பலன் கிடைக்குமா என்ற கவலை உங்களுக்கு இருக்கும். ஆனால் அதற்கான பலன்கள் நீங்கள் எதிர்பார்த்த அளவைவிட அதிகமாக இருக்கும்.

கன்னி: இன்று, தத்துவங்கள் மற்றும் நடைமுறை விஷயங்கள் கலந்த நாளாக இருக்கும். நீங்கள் மனிதாபிமானம் மிக்கவர் என்ற பாராட்டைப் பெறுவீர்கள். நீங்கள் மேற்கொண்ட திட்டங்கள் வெற்றி அடைய, முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

துலாம்: இன்று வேலை அதிகம் இருக்கும். அதன் காரணமாக எரிச்சலான மனநிலையில் இருப்பீர்கள். சூழ்நிலைகளின் காரணமாகவும், வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள கவலை காரணமாகவும், உற்சாகம் இழந்து காணப்படுவீர்கள். ஆனால் இந்த சூழ்நிலையில் நீங்கள் மன உறுதியுடன் எதிர்கொண்டு மீண்டு வருவீர்கள்.

விருச்சிகம்: நீங்கள் இன்று கடுமையாக உழைப்பீர்கள், அதோடு கூடவே நீங்கள் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வது நல்லது. வீட்டு வேலைகளில் ஈடுபட இன்று உகந்த நாளாக இருக்கும். தோட்டம், சமையல், மற்றும் சுத்தம் என மன விருப்பப்படி வீட்டு வேலைகளில் ஈடுபடவும். குடும்பத்தின் மூலம் கிடைக்கும் சந்தோஷங்கள், வேலை தொடர்பான கவலைகள் நீங்கும்.

தனுசு: உங்கள் மனநிலையில் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டு, உங்கள் தோற்றத்திலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உங்களது புதுமையான ஆடை, நகை, மற்றும் நறுமணம் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும். நீங்கள் இன்று ஒரு காந்தம் போல் அனைவரின் கவனத்தையும் கவர்வீர்கள். உங்களுடைய ரசிகர்கள் உங்களை வரவேற்பார்கள்.

மகரம்: பல்வேறு வழிகளில் இருந்து பணவரவு இருக்கும். ஆனால் அதற்கேற்ற செலவுகளும் இருக்கும். வருமானத்தை மீறி செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும். அலுவலகத்தில் சிறிய பிரச்சனைகள் ஏற்பட்டாலும், உங்களது அனுபவம் மற்றும் திறமையின் காரணமாக அவை அனைத்தையும் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்: உங்களது கனவு இல்லம் அல்லது வாகனம் கைக்கூடும் வாய்ப்பு உள்ளது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய சொத்துக்கள் வாங்கக் கூடும். அதனால் அது தொடர்பான விவரங்களை சேகரித்து, கடன் விண்ணப்பம் செய்ய நடவடிக்கை எடுக்கவும். கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதற்கு இது சிறந்த நாளாக இருக்கும்.

மீனம்: ஒரு நல்ல நாள் உங்களுக்காக காத்திருக்கிறது. நீங்கள் உங்கள் அனைத்து வேலைகளையும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாகவே திறமையாக செய்து முடித்து விடுவீர்கள். குடும்பத்துடன் விடுமுறைக்காக வெளியில் செல்ல திட்டமிடுவீர்கள். உங்களது நெடுநாள் ஆசை இன்று நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.