இன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
பிப்ரவரி 25ஆம் தேதி புதன்கிழமையான இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.

Published : February 25, 2026 at 7:02 AM IST
மேஷம்: நீங்கள் இன்று ஒரு சவாலான அல்லது ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி எதுவும் நடக்கும் வாய்ப்பு இல்லை. சற்று பொறுமையாக இருந்து, மன அழுத்தத்திலிருந்து விடுபடவும்.
ரிஷபம்: தனக்கு மட்டுமே சொந்தம் என்ற நினைப்பின் காரணமாக, சர்ச்சைகள் ஏற்படலாம். உங்கள் கோபத்தை கட்டுப்படுத்தினால் தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கலாம். உங்களை நீங்களே ஆராய்ந்து பிரச்சினைகளுக்கான தீர்வு காணுங்கள்.
மிதுனம்: சமூக வட்டத்தில் நற்பெயரைப் பெறுவீர்கள். மனம் ஏங்குகும் விஷயத்தை அடைவதற்கு திறனை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய கற்பனைத்திறன் மூலம் இன்று சில தீர்வுகள் கிடைக்கக்கூடும். உங்கள் மனதை குடையும் சில கேள்விகளுக்கு இன்று பதில் கிடைக்கலாம்.
கடகம்: இன்று அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்கும். உங்களது கருத்துக்கள் வரவேற்பை பெற்று, ஆதரவாளர்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். உங்களது கற்பனை வளம் மிகுந்து, அதற்கான பலன்கள் தேடி வரும்.
சிம்மம்: வேலையில் கிடைக்கும் பலன்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அலுவலகத்தில் உறவுகளை சிறப்பான முறையில் வைத்துக்கொள்ள மனமுதிர்ச்சியும் புரிதலும் தேவை. வர்த்தகத் துறையில் நல்ல லாபம் கிட்டும்.
கன்னி: உங்களது தன்னம்பிக்கை காரணமாக சவாலான பணிகளை மிக எளிதாக நிறைவேற்றுவீர்கள். இன்று உங்களது வர்த்தகத்திறனை சோதிக்கும் நாளாக இருக்கும். தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் புதுமையாக சிந்தித்து தீர்ப்பீர்கள்.
துலாம்: ஊக்கம் மற்றும் புத்துணர்வு கொடுக்கும் நாளான இன்று, உங்களை பெரும் புகழ் சேரும். புதுமையான திட்டங்கள், சுயநிதி தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி மற்றும் விருப்பம் நிறைவேறும் என்பதால், இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.
விருச்சிகம்: உங்களை நீங்களே ஆராய்ந்து நன்றாக சிந்திக்கவும். கர்மவினைகளை எவரும் தவிர்க்க முடியாது. பலன்களை நினைத்து அதிகம் சிந்திக்க வேண்டாம். கூட்டு முயற்சி தொடர்பான விஷயங்களில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.
தனுசு: இன்று பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுவீர்கள். எனவே அதனை விரைவாக தீர்க்க முயற்சி எடுக்கவும். ஆனால் நாளின் இறுதியில், உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மகரம்: இன்றைய தினத்தை உற்சாகத்துடன் தொடக்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். பணியிடத்தில் வேலை செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வருவீர்கள். இதனால் நலல் பலன் கிடைக்கும்.
கும்பம்: உங்கள் சக பணியாளர்கள் பணியில் உங்கள் செயல்திறனை அதிகரிக்க உதவுவார்கள். மேலும், உங்கள் படைப்பாற்றல் புகழைச் சேர்க்கும். நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் நல்ல வகையில் நேரத்தை செலவழித்து நாளை நிறைவு செய்வீர்கள்.
மீனம்: இன்று நீங்கள் எதிர்பாலினத்தினரின் கவனத்தை ஈர்ப்பீர்கள். இது எதிர்காலத்தில் உங்கள் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கும். நீங்கள் எச்சரிக்கையாக செயல்படும் ஒரு நபராக இருந்த போதிலும், கோப உணர்வு கொண்டவராகவும், சவால்களை சந்திக்க தயங்காதவராகவும் இருப்பீர்கள்.

