மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி நிச்சயம்: உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கும்?
ஆகஸ்ட் 4ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைக் காணலாம்.

Published : August 4, 2026 at 7:23 AM IST
மேஷம்: இன்று, நீங்கள் உங்கள் தோற்றத்தை மேம்படுத்த அதிக முயற்சிகள் செய்யலாம். இந்த நாள் உங்களின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் நாளாக அமையக்கூடும்.
ரிஷபம்: உங்களுக்கு காதல் உணர்வு இன்று அதிகம் இருக்கும். உங்கள் மனதிற்கு பிடித்தவர் பற்றிய எண்ணம் அலைமோதும். கனவிலும் அவர்கள் ஆக்கிரமிப்பார்கள்.
மிதுனம்: இன்றைய தினம் உங்களுக்கு மிகவும் லாபமானதாகவும், முற்போக்கான நாளாகவும் இருக்கும். வேலையில் ஊக்குவிப்பையும், பாராட்டையும் எதிர்பார்க்கலாம். அத்துடன் உங்கள் பொறுப்புகளும் அதிகரிக்கும்.
கடகம்: நெருக்கமானவர்களுடன் உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்கள் பக்தி மற்றும் அர்ப்பணிப்பு எதிர்காலத்தில் நன்மைகளை கொடுக்கும். இன்று உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் மகிழ்ச்சி பெறுவீர்கள். எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்படுவீர்கள்.
சிம்மம்: சில செல்வந்தர்கள் விருந்து உண்டு கொண்டிருக்கும் வேளையில், நிறைப்பேர் ரொட்டித்துண்டுக்கே அலைந்து கொண்டிருப்பார்கள். ஏறக்குறைய இதேபோன்ற சூழ்நிலையை இன்று நீங்கள் எதிர்கொள்ளலாம். தேவையற்ற செலவுகளை செய்வதற்கு முன்பு சிந்தியுங்கள்.
கன்னி: இன்று அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பீர்கள். உங்கள் மன அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் காரணிகள் எதுவும் இல்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்களை முழுமையாக ஆதரிப்பதோடு, தடைகளை சமாளிக்க ஊக்குவிப்பார்கள்.
துலாம்: கடந்த கால அனுபவங்களிலிருந்து பிரகாசமான எதிர்காலத்திற்காக நிறைய படிப்பினைகளை கற்றுக்கொள்வீர்கள். உங்களுக்குச் சொந்தமான சில விலையுயர்ந்த பொருட்கள் தொடர்பாக சற்று அதிகமாகவே உரிமை கொண்டாடுவீர்கள். பல்வேறு விஷயங்களைப் பற்றி நாள் முழுவதும் சிறிய அளவிலான கவலைகள் தொடரும்.
விருச்சிகம்: ஆரோக்கியமான உணவு பழக்கங்களைப் பின்பற்றி உடற்பருமனை தவிர்க்கவும். ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவுகளை உண்டு மகிழ்ச்சியாக இருங்கள்.
தனுசு: உங்களுடைய சொந்த கருத்துக்களை மனதில்கொண்டு முடிவுகளை எடுப்பீர்கள். பல்வேறு சிக்கல்களுக்கான காரணத்தை கண்டறிய முயல்வீர்கள். எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுக்க காலதாமதம் ஏற்பட்டாலும், விவேகமாக செயல்பட முயற்சிப்பீர்கள்.
மகரம்: உங்களுக்கு ஒப்படைக்கப்பட வேலையின் அளவு அதிகமாக இருப்பதால் நாள் முழுக்க நிற்கவே நேரம் இருக்காது. அது உங்கள் உற்சாகத்தை குறைக்கச் செய்யும். பிற்பகலில் நீங்கள் சோர்வடைந்து விடுவீர்கள். அறிவுபூர்வமாக சிந்தித்து, கவனமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
கும்பம்: சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பரப்புவீர்கள். எனினும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உங்களுடைய சொந்த நலன்களை தியாகம் செய்ய வேண்டும். ஒரு சமாதான செயலராக செயல்படுவது நல்ல விஷயம் என்றாலும், பிறர் அதை தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வார்கள்.
மீனம்: உங்கள் சொந்த வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். செய்ய வேண்டிய மாற்றங்களை தீவிரமாக சிந்தித்து செயலாற்றுங்கள். இருப்பினும், இது உங்களுக்கு ஒரு பொற்காலமாக இருப்பதால் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.

