கன்னி ராசிக்காரர்களின் தைரியம் பிறரை கவரும் - உங்க ராசிக்கு நாள் எப்படி இருக்கப் போகிறது?
ஜூலை 8ஆம் தேதி புதன்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

Published : July 8, 2026 at 7:02 AM IST
மேஷம்: உங்களிடம் இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்வது உங்களுக்கு நன்மை பயக்கும். பேராசை கொள்ளாமல் இருந்தால், இன்றைய நாள் சிறப்பானதாக அமையும்.
ரிஷபம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். விழாக்களில் பங்கேற்க நேரிடலாம். காரிய சித்தி அடைய அனுகூலமான நாள் இன்று. உங்களுடைய எண்ணங்கள் மற்றும் நம்பிக்கையால் உற்சாகம் கிடைக்கும்.
மிதுனம்: வேலைகளில் இலக்குகளை அடைவதிலும், உங்கள் வாழ்க்கைத்துணையின் எதிர்பார்ப்புகளை சமாளிப்பதிலும் சற்று சிரமம் ஏற்படலாம். இருப்பினும் வேலைக்கும், குடும்பத்திற்க்கும் இடையே சரியான நேரத்தை ஒதுக்குவதன் மூலம் பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும்.
கடகம்: உங்களுக்கு பொறுப்புகள், வேலைச்சுமைகள் இருந்தாலும் வீட்டிற்காக நாள் முழுவதையும் செலவிடுவீர்கள். மாலை நேரத்தில் குடும்பத்தினருக்கு அதிக நேரம் செலுத்துவீர்கள். உங்களை சுற்றியுள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள விரும்புவீர்கள்.
சிம்மம்: இன்று, நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்ய நினைத்தாலும், அதில் வெற்றியடைவது கடினம். நாளின் பிற்பகுதியில் உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு பிறக்கும். இலக்கை அடைய கடினமாக முயற்சித்தல் அவசியம்.
கன்னி: உங்களுடைய தைரியமான இயல்புத்தன்மை மற்றவர்களை கவரக்கூடியதாக இருக்கும். எனினும் சில இடர்ப்பாடுகள் இருப்பதால் கவனமாக இருக்கவும். ஆழ்ந்த சிந்தனையால் உங்களிடம் நிறைய முன்னேற்றம் காணப்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
துலாம்: இன்று அன்புக்குரியவர்களிடம் உங்கள் காதலை வெளிப்படுத்த விரும்புவீர்கள். எதிர்கால வாழ்க்கைக்காக தோற்றத்தை மேம்படுத்த முயற்சிப்பீர்கள். உங்களை நேசிப்பவர்களிடம் கடந்த கால மகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்துகொள்ள விரும்புவீர்கள்.
விருச்சிகம்: கணவன் மனைவிக்கிடையே மன ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் உங்கள் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். அனைவரின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உள்ளது. அனைத்து செயல்களிலும் வெற்றி அடைவீர்கள்.
தனுசு: இன்று நீங்கள் வணிக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. நிதி விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும். வெற்றியைக் கொண்டாடும் நாளாக இன்று அமையலாம்.
மகரம்: உங்களின் குடும்ப வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள அதிகம் உழைப்பீர்கள். அதீத வேலைப்பளுவால் கணவன் மனைவிக்கு இடையே அதிருப்தி ஏற்படும். அலுவலக உயரதிகாரிகளின் பாராட்டைப் பெறுவதுடன் எதிரிகளைத் தோற்கடிப்பீர்கள்.
கும்பம்: உங்கள் வாழ்க்கையில் நண்பர்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வீர்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று கூடும் வாய்ப்பு உள்ளது. பேச்சுத்திறமையால் வெற்றி உங்கள் வசப்படும். உங்கள் போட்டியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமின்றி எதிரிகளும் உங்கள் திறமையை பாராட்ட வாய்ப்புள்ளது.
மீனம்: இன்று உங்களுக்கு வேலைப்பளு மிகுந்த நாளாக இருக்கும். இருப்பினும் உங்களது போட்டியை எதிர்கொள்ளும் திறனால் வெற்றி கிட்டும். இன்று உங்களுக்கு பாராட்டு கிடைக்கும்.

