ETV Bharat / spiritual

மேஷம் ராசிக்காரர்கள் இன்று வெற்றியை ருசிக்கலாம் - மற்ற ராசிக்காரர்களுக்கு எப்படி?

ஜூலை 7ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Images)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : July 7, 2026 at 7:04 AM IST

1 Min Read
Choose ETV Bharat

மேஷம்: நீங்கள் நீண்டகாலமாக ஆர்வம் கொண்டிருந்த இசை, நடனம் அல்லது ஏதாவது ஒன்றை கற்க வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை இன்று நிறைவேற்றலாம். இந்த நாள் சிறப்பான மற்றும் இனிமையான வெற்றியை கொடுக்கும் நாளாக அமையும்.

ரிஷபம்: உங்களுக்கு நெருக்கமானவர் அனைவரும் நீங்கள் எதிர்பார்க்கும் ஆதரவை கொடுக்கவில்லை என நீங்கள் நினைக்கலாம். ஆனால் உணர்ச்சி வசப்படாமல் இருக்கவும் முயற்சிக்கவும். மோதல்களைத் தவிர்ப்பதும் பிரச்சினையை பொறுமையுடன் கையாள்வதும் நல்லது.

மிதுனம்: இந்த நாள் உங்களுக்கு பயனுள்ளதாக அமையும். வேலை உயர்வும், அதற்கு ஏற்றவாறு பொறுப்புகளும் அதிகரிக்கும். இருப்பினும் வெற்றி மற்றும் பாராட்டுகளை தலையில் ஏற்றிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

கடகம்: மன ஓட்டத்தை கட்டுப்படுத்துதல் அவசியம். எழுத்தாளர்களுக்கும் கலைத்துறையில் உள்ளவர்களுக்கும் இன்று உகந்த நாள். புது முயற்சிகளை இன்று தாராளமாக மேற்கொள்ளலாம்.

சிம்மம்: செலவுகளை கட்டுப்படுத்துதல் அவசியம். இல்லையெனில் நெருக்கடிகளை சந்திக்க நேரிடலாம். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.

கன்னி: உங்களுக்கு நெருக்கமானவர்கள் இன்ப அதிர்ச்சியை தரலாம். மேலும், அதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று ஏற்ற நாள். உங்களின் கடந்த கால தவறுகளை ஒப்புக்கொண்டு, மீண்டும் அவற்றை செய்யாமல் இருத்தல் நன்மை பயக்கும்.

துலாம்: கடந்த கால அனுபவத்தைக் கொண்டு புத்திசாலித்தனமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சிறு சிக்கல்கள் உங்களை கவலைக்குள்ளாக்கலாம். இருப்பினும், அனுபவத்தால் அவற்றை லாவகமாக கையாள்வீர்கள்.

விருச்சிகம்: ஆரோக்கியமான உணவு பழக்கங்களைப் பின்பற்றவும். உடற்பருமன் ஏற்படுவதைத் தவிர்க்க உடற்பயிற்சி செய்யவும். ஒழுங்கற்ற உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

தனுசு: இன்று வேலையிடத்தில் பணிச்சுமை கூடும். இருப்பினும், அதை ஆக்கப்பூர்வமான சவாலாக எடுத்துக்கொண்டு நேர்மறையாக பணியாற்றுவீர்கள். சொந்த வாழ்க்கையில் உங்கள் நண்பர்கள் பட்டியல் நீளும். இன்று உற்சாகமாக செயல்படுவீர்கள்.

மகரம்: இன்று பழைய நினைவுகளை புரட்டிப் பார்த்து பொன்னான தருணங்களை அசைபோட்டு மகிழ்வீர்கள். முன்பு உங்கள் மனதிற்கு நெருக்கமாக இருந்தவருடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முயற்சிப்பீர்கள்.

கும்பம்: வாழ்க்கையின் முக்கிய முடிவுகளில் உணர்வுபூர்வமாக எடுக்க வேண்டாம். பகுத்தறிவுடன் செயல்படா விட்டால் அதுவே ஒரு தடைக்கல்லாக மாறலாம். உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

மீனம்: இன்று காதல் துணையோடு நேரம் செலவழிப்பீர்கள். காதல் துணை இல்லாதவர்கள் பொருத்தமான துணையை கண்டுபிடிப்பார்கள். திருமணமானவர்கள் உறவில் ஒரு புதிய நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள். பணியில் உங்கள் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்படும்.