ETV Bharat / spiritual

கடக ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் சாதகமான நாள் - உங்க ராசிக்கு எப்படி?

மார்ச் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமையான இன்று, மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களைப் பார்க்கலாம்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Getty Image)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : March 3, 2026 at 7:05 AM IST

1 Min Read
Choose ETV Bharat

மேஷம்: இன்று உங்கள் குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். நெடு நாட்களாக முடிக்காமல் இருந்த பணிகளை நிறைவு செய்வீர்கள். மருத்துவத்துறை மற்றும் பொதுத்துறையில் இருப்பவர்களுக்கு இன்று சிறந்த நாளாக இருக்கும்.

ரிஷபம்: ஒரு ஆக்கபூர்வமான போட்டி நிறைந்த நாளாக இன்றைய நாள் இருக்கும். உங்களது செயல்திறன் மூலமாக உங்களுடன் பணிபுரிபவர்களையும், மேலதிகாரிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள்.

மிதுனம்: உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன், ஒரு உணர்வுபூர்வமான உறவு இருக்கும். இன்று பெரும்பாலும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பீர்கள். உங்களது உற்சாகத்தை குறைக்கும் சில விஷயங்கள் நடக்கக்கூடும். ஆனால் புன்னகையுடன் எதிர்கொண்டால் அவற்றை தீர்த்துவிடலாம்.

கடகம்: இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். பெரிய இழப்புகள் எதுவும் இல்லை என்றாலும், குழப்பமான மனநிலையில், தனிமையில் நேரத்தை செலவிடுவீர்கள். குழந்தைகள் பிரிவின் காரணமாக, உணர்வுரீதியாக பாதிக்கப்படக்கூடும்.

சிம்மம்: எதிர்பார்த்த பலன்களை அடைவீர்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். பணியிடத்தில் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். தேவையில்லாத சச்சரவுகள் ஏற்படும் என்பதால், உறவுகளிடம் கவனமாக இருக்கவும்.

கன்னி: இன்று குடும்பத்தினரின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள். உங்களது சிறந்த பேச்சுத்திறன் காரணமாக, சச்சரவுகள் அனைத்தும் எளிதாக தீர்க்கப்படும். உங்களது அமைதியான பொறுமையான நடைமுறை பல பாடங்களை கற்றுத்தரும்.

துலாம்: நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன், சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். குடும்பத்தினருடன் சிறிய சுற்றுலா அல்லது விருந்திற்கு செல்லும் வாய்ப்பு உண்டு. கோயில் அல்லது ஆன்மிக இடங்களுக்குச் சென்று, உங்கள் எண்ணத்தை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

விருச்சிகம்: அதிக நெருக்குதல் காரணமாக, நீங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவழிப்பது நல்லது.

தனுசு: பலவகையான பணிகளை கையாளும் திறன் பெற்றவராக இருப்பீர்கள். சிறிது சவால்களை சந்தித்தாலும், உங்களது நம்பிக்கை மற்றும் செயல்திறன் காரணமாக அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். இன்று உங்களுக்கு சுமுகமான நாளாகவே இருக்கும்.

மகரம்: முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை முடிப்பதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை முடித்துவிடுவீர்கள். கொடுத்த நேரத்தில் பணியை நிறைவு செய்யாததால், மேலதிகாரி அதிர்ச்சியடையக் கூடும். நிதி தொடர்பான விஷயங்களை நீங்கள் ஒத்தி போட விரும்ப மாட்டீர்கள்.

கும்பம்: குடும்பத்தினரையும் நண்பர்களையும் மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள். நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் அன்பு, பல மடங்குகளாக உங்களை வந்தடையும். உங்களது ஈடுபாட்டின் காரணமாக குடும்பத்தின் மதிப்பையும் அன்பையும் பெறுவீர்கள்.

மீனம்: உங்களது படைப்பாற்றல் மற்றும் புதுமையான வகையில் பணிகளை மேற்கொள்ளும் தன்மை காரணமாக சிறந்த விளங்குவீர்கள். நீங்கள் விரும்பும் பணியை செய்தால், நிச்சயம் அனைவரையும் விட சிறந்து விளங்குவீர்கள்.