கடினமான பிரச்சினைகளையும் எளிதில் கையாளுவார்கள் - எந்த ராசிக்காரர்கள் தெரியுமா?
மே 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்.

Published : May 29, 2026 at 7:08 AM IST
மேஷம்: இன்று நீங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு புத்துணர்வு பெறவும். இதன்மூலம் நீங்கள் பெரிய அளவில் வெற்றி பெற முடியும்.
ரிஷபம்: உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், கோரிக்கை வைப்பதற்கும் இன்று சாதகமான நாள் அல்ல. சச்சரவுகள் விவாதங்களை தவிர்க்கவும். இல்லாவிட்டால் அது உங்களை பெரிதும் பாதிக்கும். எனவே கவனமாக செயல்படவும்.
மிதுனம்: நீங்கள் பொதுவாக கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தாலும் இன்று வித்தியாசமாக, வெளியில் சென்று உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இந்த தற்காலிக மாற்றம் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.
கடகம்: பணியிடத்தில் கூட்டாளிகளை ஏற்படுத்தி முக்கிய திட்டங்களில் வெற்றி காண்பீர்கள். இருப்பினும், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன், அதனை முழுமையாக படித்து அறிந்துகொள்வது நல்லது.
சிம்மம்: நீங்கள் கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து சிந்திப்பீர்கள். பழைய தொடர்புகளை தொழில் ரீதியான சந்திப்புகளின் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை தவறவிட வேண்டாம்.
கன்னி: இன்று வர்த்தகம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய இரண்டுக்கும் நேரம் ஒதுக்குவீர்கள். விருந்துகளில் கலந்து கொள்வீர்கள். வெளியில் செலவிடும் நேரத்திற்கு ஏற்ப செலவும் இருக்கும். எனவே சிந்தித்து முடிவெடுக்கவும்.
துலாம்: வர்த்தக ஆலோசனை மற்றும் அலுவலக கூட்டங்களில் சிறந்து விளங்குவீர்கள். வேலை நிமித்தமான தொடர்புகள் எளிதாகும். மாலைப்பொழுதை உங்கள் மனதிற்கு பிடித்தவருடன் கழித்து மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் விரும்புவீர்கள்.
விருச்சிகம்: உறவுகளை அணுகும் விதத்தில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்துவது நல்லது. பாதிக்கப்பட்டுள்ள உறவுகளை சரிசெய்ய முயற்சி எடுக்கவும். இந்த முயற்சியில் தோற்றுப் போகாமல் இருக்க கவனத்துடன் செயல்படவும்.
தனுசு: இன்றைய தினத்தைப் பொருத்தவரை மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தொழில் ரீதியான உங்களது அணுகுமுறையின் காரணமாக, கடினமான பிரச்சினைகளையும் எளிதாக கையாள்வீர்கள். பிறரின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பதால், உங்களுக்கு பல நண்பர்கள் இருப்பார்கள்.
மகரம்: கடந்த கால நினைவுகள் மனதில் அலைமோதுவதால் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்களுடன், இனிமையாக மாலைப்பொழுதை கழிப்பது சோர்வை நீக்கி, அடுத்த நாள் பணிக்கு தயாராக உதவியாக இருக்கும்.
கும்பம்: இன்று கவலையும் மகிழ்ச்சியும் கலந்த நாளாகும். பகல் முழுக்க வேலை செய்யும் நீங்கள் மாலையில் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறுவீர்கள். வலிக்கு பிறகுதான் மகிழ்ச்சி என்பதை உணர்வீர்கள்.
மீனம்: உங்களுக்கு அதிக நண்பர்கள் இருந்தாலும், சில குறிப்பிட்ட நண்பர்களே நெருக்கமாக இருப்பார்கள். அவர்களுடன் சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு, நிம்மதியாக இருப்பீர்கள்.
மேஷம்: உலகம் இன்று வண்ணமயமாக இருக்கும். உங்களுக்கு அனைத்திலும் ஆர்வம் அதிகம் இருக்கும். உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டால், உங்களை நீங்களே ஆராய்ந்து சிந்தித்து, பிரச்சினைகளை தீர்க்கவும்.

